
உக்ரைன் அகதிகளை சந்தித்த பிரியங்கா சோப்ரா
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகிறார். உலகம் முழுக்க நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தற்போது கணவர் நிக் ஜோன்ஸ் உடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
உக்ரைன் போரினால் இடம் பெயர்ந்துள்ள அகதிகளுக்கு உலக தலைவர்கள் உதவ வேண்டும் என்று ஏற்கெனவே குரல் கொடுத்த பிரியாங்கா சோப்ரா, அதற்கான நன்கொடையும் திரட்டி வந்தார். இந்த நிலையில் போலந்தில் தங்கி உள்ள உக்ரைன் அகதிகளை நேரில் சென்று சந்தித்தார். அகதி முகாமில் உள்ள குழந்தைகளோடு மகிழ்ச்சியோடு உரையாடினார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.