குத்தாட்டம் போடும் ஸ்விக்கி ஊழியர்கள்.. இப்படியொரு விஷயத்தை யாரும் செய்ய மாட்டாங்க..!

இந்திய நிறுவனங்கள் ஊழியர்களைத் தக்க வைக்கவும், தொடர்ந்து அதிகப்படியான செயல்திறனை ஈட்டவும் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

இதில் முக்கியமான பல முன்னணி ஸ்டார்ட்அப் மற்றும் நியூ ஏஜ் டெக் நிறுவனங்கள் லீவ் பாலிசி நீக்குதல், வாரத்திற்கு 4 நாள் வேலை, ஆபீஸ் வராமல் எங்கிருந்தும் வேலை செய்யும் சலுகை எனப் பலவற்றை அளித்து வருகிறது.

இந்நிலையில் ஸ்விக்கி இந்தியாவில் அனைத்து நிறுவனங்களை விட ஒரு படிக்கு மேல் சென்று Moonlighting என்ற புதிய கொள்கையை அறிமுகம் செய்து, இந்திய நிறுவனங்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதேவேளையில் ஸ்விக்கி ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

ஸ்விக்கி ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. யாருக்கெல்லாம்?

ஸ்விக்கி

ஸ்விக்கி

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, தனது சக போட்டி நிறுவனமான சோமேட்டோ போல ஐபிஓ வெளியிட திட்டமிட்டு வந்த நிலையில் அதை ஸ்லோ டவுன் செய்துள்ளது.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

இந்த நிலையில் ஸ்விக்கி தனது வர்த்தகத்தையும் நிர்வாகத்தையும் மறுசீரமைப்பு செய்யும் இதேவேளையில் இந்தியாவில் இதுவரையில் யாரும் அறிவிக்காத ஒரு கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. Moonlighting என அழைக்கப்படும் இந்தக் கொள்கை மூலம் ஸ்விக்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

வெளி நிறுவனம்
 

வெளி நிறுவனம்

இக்கொள்கை மூலம் ஸ்விக்கி ஊழியர்கள் வெளி நிறுவனத்தில் இருந்து ப்ராஜெக்ட்களில் அனுபவத்திற்காகவும், பணத்திற்காகவும் பணியாற்ற அனுமதிக்கிறது. அதாவது ஸ்விக்கி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் இதேவேளையில் வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்ற முடியும்.

கண்டிஷன்

கண்டிஷன்

ஆனால் ஸ்விக்கி வைக்கும் ஒரு கண்டிஷன் என்னவென்றால், இந்த வெளி நிறுவன வேலைகளை அலுவலக நேரத்தைத் தாண்டி தான் செய்ய வேண்டும் அல்லது வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் மட்டுமே பணியாற்ற வேண்டும். மற்ற நேரத்தில் அலுவலகப் பணிகளை மட்டுமே பார்க்க வேண்டும்.

 ப்ரீலான்சர் தேவை

ப்ரீலான்சர் தேவை

இந்தியாவில் ப்ரீலான்சர் தேவை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், மத்திய அரசும் இதற்கான கொள்கைகளையும் தீவரமாக வடிவமைப்புச் செய்து வரும் நிலையில், ஸ்விக்கி நிறுவனத்தின் இந்த Moonlighting கொள்கை இந்தியச் சந்தையில் இதுபோன்ற கொள்கை மாற்றத்தின் ஆரம்பப் புள்ளியாக உள்ளது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இன்னும் இந்தியாவில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கான No Leave Policy-ஐ அறிவிக்கத் தயங்கி வரும் வேளையில், இந்த Moonlighting கொள்கை எல்லாம் இந்தியாவில் இயல்பான ஒன்றாக மாறக் குறைந்தது 5 வருடத்தில் இருந்து 10 வருடம் வரையில் தேவைப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Swiggy launches ground breaking India’s First kind of Moonlighting policy

Swiggy launches ground breaking India’s First kind of Moonlighting policy குத்தாட்டம் போடும் ஸ்விக்கி ஊழியர்கள்.. இப்படியொரு விஷயத்தை யாரும் செய்ய மாட்டாங்க..!

Story first published: Wednesday, August 3, 2022, 16:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.