திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தபால்களை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் ஆற்று ஓடைப்பகுதியில் வீசி சென்ற பெண் பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் செண்பகனூர் அருகே சாலையோரத்தில் உள்ள ஓடையில் ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், அரசு பணிகள் குறித்த தபால்கள் உள்ளிட்ட முக்கிய பதிவு தபால்கள் குப்பை போல் வீசப்பட்டு கிடந்தன.
இதனையறிந்த போலீசார் அவற்றை கைப்பற்றி தபால் நிலையத்தில் ஒப்படைத்ததோடு விசாரணை மேற்கொண்டதில், கொடைக்கானல் தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் பணியாளரான மாலதி, தபால்களை ஓடைப்பகுதியில் வீசியது உறுதியானது. அவர் எதற்காக தபால்களை ஓடையில் வீசி சென்றார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.