இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான சேவை நிறுவமான இண்டிகோ, இன்று அதன் ஜூன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன் படி காலாண்டில் மோசமாக இழப்பினை கண்டுள்ளது.
இதன் நிகர நஷ்டமானது 1064 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வந்த விமான எரிபொருள் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணிகளினால் இழப்பினைக் கண்டுள்ளது.
எனினும் இந்த விமான நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 3174 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிக கடன் கொண்ட 10 நாடுகள்.. லிஸ்டில் யாரெல்லாம் இருங்காங்க?

வருவாய் அதிகரிப்பு
எப்படியிருப்பினும் இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது, கடந்த ஆண்டினை காட்டிலும் 328% அதிகரித்து, 12,855 கோரி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய் அதிகரித்திருந்தாலும், செலவினங்கள் அதிகரிப்பால் நிறுவனம் நஷ்டத்தினையே எதிர்கொண்டுள்ளது.

இதுவரை இல்லாதளவு வருவாய்
இண்டிகோவின் வருவாய் விகிதமானது இதுவரையில் இல்லாதாளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் வருவாய் விகிதமானது 3006.90 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டினை காட்டிலும் இண்டிகோவின் பயணிகளின் எண்ணிக்கையானது 221.9% அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றம்
மொத்தத்தில் இந்த விமான நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 13,018.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
விமானங்களுக்கான எரிபொருள் விலையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 95.5% அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இதன் EBITDAR விகிதம் 716.90 கோடி ரூபாயாக உள்ளது. இதே இதன்
EBITDAR மார்ஜின் விகிதமானது 5.6% ஆகவும் உள்ளது.

சிஇஓ-வின் கருத்து
இண்டிகோவின் இந்த முடிவுகள் குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி, ரோனோஜாய் தத்தா, இந்த காலாண்டில் எங்களின் வருவாய் இதுவரை இல்லாதளவுக்கு உச்சம் எட்டியுள்ளது. இதன் மூலம் செயல்பாட்டளவில் நாங்கள் நல்ல வருவாயினை ஈட்டியுள்ளோம். எனினும் எரிபொருள் விலை மற்றும் அன்னிய செலவாணி மீதான செலவுகள் அழுத்தத்தினை அதிகரித்துள்ளது.

வலுவாக இருக்கலாம்
இது வலுவான வருவாய் கண்டிருந்தாலும், நிகர லாபத்தினை மாற்றியுள்ளது. இரண்டாவது காலாண்டிலும் எங்களது நிதியறிக்கையானது சவாலானதாக இருக்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வலுவான வருவாயினை நிறுவனம் பெறும் என கூறியுள்ளார்.
இதற்கிடையில் இப்பங்கின் விலையானது 1.20% அதிகரித்தும், 1967 ரூபாபாயாக முடிவடைந்துள்ளது.
Indigo Q1 results: This airlines announced net loss to Rs.1064 crore: but revenue records highest ever
Indigo Q1 results: This airlines announced net loss to Rs.1064 crore: but revenue records highest ever /இதுவரை இல்லாத நஷ்டம்.. ஆனா ஒரு நல்ல விஷயமும் இருக்கு..இண்டிகோவின் செம அறிவிப்பு!