
அடுத்த மாதம் வெளிவருகிறது அதர்வாவின் ட்ரிக்கர்
3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் 100. இதனை சாம் ஆன்டன் இயக்கி இருந்தார். அதர்வா, ஹன்சிகா நடித்திருந்தார்கள். இப்போது அதர்வா, சாம் ஆன்டன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் டிரிக்கர்.
ப்ரோமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர்களுடன் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படம் இந்த வாரம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.