இண்டிகோவின் ஸ்வீட் 16.. அள்ளித்தரும் ஆஃபர்கள், ஊர் சுற்ற தயாரா?

விமானச் சேவை தொடங்கி 16 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து 16வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் ‘ஸ்வீட் 16’ என்ற சலுகையை அறிவித்துள்ளது.

இந்த சலுகையின்படி அனைத்து உள்நாட்டு வழித்தடங்களிலும் பெரும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை அடுத்த ஆண்டு ஜூலை வரை இருக்கும் எனவும் இந்த சலுகையை பெற குறைந்தபட்ச விமான கட்டணம் குறித்த அறிவிப்பையும் இண்டிகோ அறிவித்துள்ளது.

இண்டிகோவில் ‘ஸ்வீட் 16’ சலுகை

இண்டிகோ விமான நிறுவனம் தனது 16ஆம் ஆண்டு நிறைவை அடுத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி, இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு வழித்தடங்களில் பறக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ‘ஸ்வீட் 16’ ஆண்டு விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு ஆண்டுக்கு சலுகை

ஒரு ஆண்டுக்கு சலுகை

‘ஸ்வீட் 16’ சலுகை 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை 16 வரையிலான பயணங்களுக்கு தள்ளுபடி கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சலுகையை பெற குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.1,616 இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சலுகைகள் குறித்த முழு விபரங்களை பகிர்ந்துள்ளது.

முன்பதிவு 3 நாட்கள் மட்டுமே
 

முன்பதிவு 3 நாட்கள் மட்டுமே

‘ஸ்வீட் 16’ சலுகையை பயன்படுத்தி 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை 16 வரையிலான பயணங்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மூன்று நாட்களில் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இதுவொரு இனிமையான வாய்ப்பு என்றும், உங்கள் விமான பயணங்களை முன்பதிவு செய்ய காத்திருக்க வேண்டாம் என்றும் இண்டிகோ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே திட்டமிட உதவும்

முன்கூட்டியே திட்டமிட உதவும்

‘ஸ்வீட் 16’ சலுகை குறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி சஞ்சய் குமார் அவர்கள் கூறியபோது, ‘பயணத்திற்கான அதிக தேவையை நாங்கள் காண்கிறோம் என்றும் இந்த சலுகை பயணிகளின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட உதவும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சில சலுகைகள்

மேலும் சில சலுகைகள்

மேலும் கா-சிங் கார்டுகளுக்கு 1,000 ரிவார்டு புள்ளிகள் வரை 6E வெகுமதிகளாக 25 சதவீத கேஷ்பேக் சலுகையை இண்டிகோ விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் வாடிக்கையாளர்கள் தங்களின் HSBC கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்றும், அதில் குறைந்தபட்ச மதிப்பு ரூ.3,500க்கு முன்பதிவு செய்தால் ரூ. 800 வரை 5 சதவீத கேஷ்பேக் சலுகையை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IndiGo goes ‘Sweet 16’ Anniversary offers Sale, Check flight tickets!

IndiGo goes ‘Sweet 16’ Anniversary offers Sale, Check flight tickets! | இண்டிகோவில் ஸ்வீட் 16.. அள்ளித்தரும் ஆஃபர்கள், ஊர் சுற்ற தயாரா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.