இந்தியா கச்சா எண்ணெய், நிலக்கரியை மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றது.
குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு இடையே, ரஷ்யாவில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
இதற்கிடையில் தற்போது நிலக்கரியும் அதிகளவில் இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு ஜாக்பாட்: கச்சா எண்ணெயை தொடர்ந்து நிலக்கரி-க்கும் ரஷ்யா தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?

சாதனை அளவு
ரஷ்யா ஜூலை மாத தரவின் படி, இந்தியாவின் மூன்றாவது பெரிய நிலக்கரி இறக்குமதியாளராக மாறியுள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஐந்தில் ஒரு பங்கு நிலக்கரியினை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது. இது 2.06 மில்லியன் டன்னாக சாதனை அளவை எட்டியுள்ளது என இந்திய ஆலோசனை நிறுவனமான கோல்மின்ட் தரவு காட்டுகின்றது.

ரஷ்யாவின் முந்த நிலை
ரஷ்யா முன்னதாக இந்தியாவுக்கு ஆறாவது பெரிய சப்ளையராக இருந்து வந்தது. ரஷ்யாவுக்கு முன்பாக இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் மொசம்பிக், கொலம்பியா என பல நாடுகளும் உள்ளன. இந்த 5 நாடுகள் தான் டாப் 5 இறக்குமதியாளர்களாக இருந்து வந்தன.

கிட்டதட்ட 5 மடங்கு அதிகரிப்பு
சமீபத்தில் இந்தியாவின் மத்திய வங்கியானது இந்திய ரூபாயில் பேமெண்ட் ஆப்சனுக்கு அனுமதி கொடுத்த நிலையில், ரஷ்யாவுடனான வணிக உறவுவானது மேம்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் இந்தியாவின் இறக்குமதியானது, ரஷ்யாவில் இருந்து மட்டும் கிட்டதட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இது மதிப்பு 15 பில்லியன் டாலருக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

மிகப்பெரிய இறக்குமதியாளர்
உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான இந்தியா, மிகப்பெரிய இறக்குமதியாளர், நிலக்கரி நுகர்வோராகவும் உள்ளது. இந்தியா அதிகளவில் குக்கிங் நிலக்கரியினை இறக்குமதி செய்து வருகின்றது. இந்தியாவில் நிலக்கரியானது அதிகளவில் ஸ்டீல் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தள்ளுபடி விலையில் நிலக்கரியா?
ரஷ்யா நிலக்கரியையும் தள்ளுபடி விலையில் வழங்கி வருவதால், தற்போது இந்தியாவின் முக்கிய இறக்குமதியாளராகவும் மாறியுள்ளது. இது மின் உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சர்வதேச அளவில் வரலாறு காணாத அளவு விலையானது உச்சத்தினை எட்டியது. இந்த நேரத்தில் தான் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி அதிகரித்துள்ளது.

தெர்மல் கோல்
கடந்த ஜூலை மாதத்தில், ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது தெர்மல் கோல் இறக்குமதியானது 70.3% அதிகரித்துள்ளது. இது 1.29 மில்லியன் டன் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இதே குக்கிங் கோல் இறக்குமதியும் மூன்றில் இரண்டு பங்கு அதிகரித்து, 2 80,000 டன்னாகவும் அதிகரித்துள்ளது.

டாப் 3 யார்
தற்போது வரையில் இந்தியாவுக்கு இந்தோனேஷியா தான் டாப் சப்ளையராக உள்ளது. தென் ஆப்பிரிக்கா ரஷ்யாவை விட சற்றே முன்னிலையில் உள்ளது. ரஷ்யாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதியில் அதிகம் சிமெண்ட் சப்ளையர்களுக்கும், ஸ்டீல் உற்பத்தியாளர்களும் அதிகளவில் இறக்குமதி செய்து வருகின்றனர்.
உலகளவில் மொபைல் உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் எது.. டாப் 10 நிறுவனங்கள் எது?
Russia becomes India’s 3rd largest coal supplier in July
Russia becomes India’s 3rd largest coal supplier in July/இந்தியாவுக்கு ஜாக்பாட் தான்.. நிலக்கரி இறக்குமதியில் மூன்றாவது இடத்தில் ரஷ்யா.. !