குட்டி நாடு தான் தைவான்.. ஆனால் சாதாரணமானது இல்லை..!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்குச் சென்றதையொட்டி உலக நாடுகளின் கவனத்தை மொத்தமாக ஈர்த்துள்ளது தைவான்.

சீன பொருளாதாரம், வர்த்தகம், ஏற்றுமதியில் அதிகப்படியான மாற்றங்கள், தடுமாற்றங்கள் இருக்கும் வேளையில் தைவான் நாட்டைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்ட வர தீவிரமாக உள்ளது.

தைவான் எல்லையில் தற்போது 20க்கும் அதிகமான ராணுவ விமானங்களைச் சுற்றுவது மட்டும் அல்லாமல் ராணுவ ஒத்திகைகளைத் தீவிரமாகச் சீன முப்படைகளும் செய்து வருகிறது.

சீனா-வை கட்டம் கட்டி அடிக்க தயாராகும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்..?

தைவான் பொருளாதாரம்

தைவான் பொருளாதாரம்

சர்வதேச பொருளாதார நாடுகள் மத்தியில் சீனா அமெரிக்காவுடன் முதல் இடத்திற்குப் போட்டிப்போட்டு வரும் நிலையில், 2வது இடத்தில் அசைக்க முடியாத வலிமையுடன் உள்ளது. இந்த நிலையில் தைவான் நாட்டைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர சீனா துடிக்க என்ன காரணம்..? தைவான் நாட்டின் பொருளாதாரம் நிலவரம் என்ன..?

வர்த்தக உபரி

வர்த்தக உபரி

உலகின் முன்னணி வர்த்தக நாடுகளில் ஒன்றாக இருக்கும் தைவான் ஆரோக்கியமான வர்த்தக நிலையுடன் உள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் தைவான் நாட்டின் ஏற்றுமதி 246.7 பில்லியன் டாலர், இதேபோல் இறக்குமதி அளவை பார்த்தால் 219.0 பில்லியன் டாலர் தான். இதன் மூலம் 27.7 பில்லியன் டாலர் வர்த்தக உபரியை கொண்டு உள்ளது.

வர்த்தகக் கூட்டணி நாடு
 

வர்த்தகக் கூட்டணி நாடு

சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக இருக்கும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதியாகச் சீனா கூறுகிறது. இதைத் தைவான் மறுக்கும் நிலையில் அமெரிக்காவின் தலையீடு மூலம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. தைவான் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் சீன நாட்டுக்கானது. இதேபோல் சீனாவின் மொத்த இறக்குமதியில் 5ல் ஒரு பங்கு தைவான் நாட்டைச் சார்ந்தது.

மாபெரும் வளர்ச்சி

மாபெரும் வளர்ச்சி

தைவான் ASEAN, ஜப்பான், அமெரிக்க நாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் காரணத்தால் முக்கிய வர்த்தகக் கூட்டணி நாடாக உள்ளது. தைவான் கடந்த 1960 முதல் 1990 வரையில் பல துறையில் மிகப்பெரிய அளவிலான தொடர் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

எலக்ட்ரானிக்ஸ் - செமிகண்டக்டர்

எலக்ட்ரானிக்ஸ் – செமிகண்டக்டர்

தைவான் நாட்டின் வர்த்தகத்தில் பெரும் பகுதி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளது, இந்நாட்டின் சிறப்பு உற்பத்தி பொருட்கள் என்றால் செமிகண்டக்டர் தான். பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு இதயமாக விளங்குவது செமிகண்டக்டர் சிப் தான். இதைத் தொடர்ந்து தைவான் அதிகளவில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி செய்கிறது.

சேவை துறை

சேவை துறை

தைவான் பொருளாதாரத்தில் உற்பத்தி துறை முக்கியப் பங்கு வகித்தாலும், சேவை துறை தான் ஆதிக்கம் செலுத்துகிறது. தைவான் நாட்டின் மொத்த ஜிடிபி-யில் 60 சதவீதம் சேவை துறை, 36 சதவீதம் தொழிற்துறை, விவசாயம் 2 சதவீதத்திற்குக் கீழ் தான் உள்ளது.

548 பில்லியன் டாலர்

548 பில்லியன் டாலர்

உலகிலேயே அதிகப்படியான அன்னிய செலாவணி இருப்பைக் கொண்டு இருக்கும் நாடுகளில் தைவான் முக்கியமானதாக விளங்குகிறது. 2022 தரவுகள் அடிப்படையில் தைவான் சுமார் 548 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி வைத்துள்ளது, இது உலகளவில் 6வது இடம்.

Asian Tigers பட்டம்

Asian Tigers பட்டம்

தைவான் நாட்டில் 1960 முதல் 1990 வரையில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் வாயிலாக உலக நாடுகள் தைவானுக்கு Asian Tigers எனச் செல்லப்பெயர் கொடுத்தது. இந்தத் தடாலடி வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அதிகப்படியான நில சீர்திருத்தங்கள், அமெரிக்காவின் உதவி, ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறை ஆகியவற்றின் மூலம் வேகமாக வளர துவங்கியது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

1960 முதல் 1994 ஆண்டுகள் மத்தியில் தைவான் சராசரியாக 8.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தைவான் நாட்டின் முக்கியமான நிறுவனங்கள் எது தெரியுமா..?

  • Taiwan Semiconductor Manufacturing
  • ASE Technology Holding
  • United Microelectronics
  • Chunghwa Telecom
  • Himax Technologies
  • Foxconn / Hon Hai Precision Industry
  • MediaTek
  • Formosa Petrochemical
  • Pegatron
  • Evergreen
  • Wistron

இந்தியா தான் அடுத்த ஐரோப்பா.. கனவு திட்டத்தை தீட்டும் ரஷ்யா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Amazing Facts About Taiwan Economy; Know Why china targeting Taiwan

Amazing Facts About Taiwan Economy; Know Why china targeting Taiwan குட்டி நாடு தான் தைவான்.. ஆனா சாதாரணமானது இல்லை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.