வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில், என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் மலை ரயில் தப்பியது. இதில் 50 பயணிகள் உயிர் காப்பாற்றப்பட்டது..
இமாச்சல் பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சலோன் மாவட்டத்தில் கல்கா-சிம்லா இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாட்டாமோர் என்ற இடத்தில் வந்த போது மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு மெகா சைஸ் பாறைகள் தண்டவாளத்தில் விழுவதை என்ஜின் டிரைவர் தொலைவில் இருந்து கவனித்து விட்டார்.
![]() |
உடன் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்தும், உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு, தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணிகள் நடக்கின்றன. இந்த சம்பவத்தால் அங்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. டிரைவரின் சமார்த்தியத்தால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement