தந்தை மளிகை கடைக்காரர்.. மகனுக்கு 50 லட்சம் சம்பளம்.. மைக்ரோசாப்ட்-ல் வேலை..!

மளிகை கடைக்காரரின் மகனான பிடெக் மாணவர் ஒருவர் அமேசான், காக்னிசன்ட் ஆகிய நிறுவனங்களில் இருந்து வேலை கிடைத்த போதிலும் அதில் சேராமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மட்டுமே வேலையில் சேருவேன் என்று உறுதியாக இருந்து அந்த வேலையையும் அவர் பெற்றுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஏன் தான் வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பியதன் காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.

அவர் நினைத்தபடியே தற்போது அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூபாய் 50 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ள நிலையில் அந்த மாணவருக்கு அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..!

 மைக்ரோசாப்ட் வேலை

மைக்ரோசாப்ட் வேலை

தந்தை மளிகைக்கடைக்கார மற்றும் தாயார் இல்லத்தரசி என்ற குடும்ப சூழ்நிலை கொண்ட ஹரியானாவை சேர்ந்த பிடெக் மாணவர் மதுர் ரகேஜா. இவர் அமேசான், காக்னிசன்ட் ஆகிய நிறுவனங்களின் வேலையை நிராகரித்த நிலையில் அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் சம்பளத்தில் கிடைத்த வேலை வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

பிடெக் படிப்பு

பிடெக் படிப்பு

ஹரியானாவைச் சேர்ந்த மதுர் ரகேஜா, டெஹ்ராடூனில் உள்ள பல்துறைப் பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தகவல் தொடர்பான பிடெக் படிப்பை முடித்தார்.

ஆர்வம்
 

ஆர்வம்

தனது படிப்பு மற்றும் வேலையின் எதிர்பார்ப்பு குறித்து பேசிய ரகேஜா, ‘உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் திறன் கொண்ட படிப்பில் நான் ஆர்வமாக இருந்தேன். அதற்காக கணினி அறிவியல் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருதேன். அப்போதுதான் கணினி அறிவியல் பிரிவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தகவல்களில் நிபுணத்துவம் படிப்பு உள்ளது என்பதை நான் அறிந்து அந்த படிப்பை தேர்வு செய்தேன்.

வேலை

வேலை

நான் படித்து முடித்தவுடன் எந்தெந்த நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும் என்ற பட்டியலை என் மனதில் வைத்திருந்தேன். மைக்ரோசாப்ட் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கு தேவையான திறன்களை வளர்த்து கொண்டு நேர்காணலுக்கு தயாரானேன். அமேசான், டிஇ ஷா, ஆப்டம், காக்னிசன்ட் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கும் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தேன்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

எனக்கு அமேசானிலிருந்து இன்டர்ன்ஷிப் சலுகையுடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைத்தது. அதேபோல் மைக்ரோசாப்ட், ஆப்டம் மற்றும் காக்னிசென்ட் ஆகியவற்றிலிருந்தும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் மைக்ரோசாப்டை தேர்வு செய்தேன்

என்ன காரணம்

என்ன காரணம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நல்ல சம்பளம் உள்பட பல்வேறு சலுகைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களை தொடர ஊக்குவிக்கும் தன்மை ஆகியவை காரணமாக இந்நிறுவனத்தை தேர்வு செய்தேன் என்று மதுர் ரகேஜா கூறினார். இவருக்கு தற்போது பெங்களூரில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதால் விரைவில் அவர் பெங்களூரில் குடியேறவுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

BTech Student reject Amazon And Cognizant job, Accepts Rs 50 Lakh Job Offer From Microsoft

BTech Student reject Amazon And Cognizant job, Accepts Rs 50 Lakh Job Offer From Microsoft | தந்தை மளிகை கடைக்காரர்.. மகனுக்கு 50 லட்சம் சம்பளம்.. மைக்ரோசாப்ட்-ல் வேலை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.