தேங்காய் ஈஸியா உடைக்க வழி இருக்கு… ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க!

Coconut health benefits in tamil: நம்முடைய ஊர்களில் பரவலாக கிடைக்கும் உணவுப்பொருட்களில் ஒன்றாக தேங்காய் உள்ளது. இவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்புகளும், பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலும் அதிகமாக இருக்கிறது. இதனால் இவை நம்முடைய உடலுக்கு பேருதவியாக உள்ளது. தேங்காயில் மிகுந்து காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

தேங்காயில் உள்ள நல்ல கொழுப்பு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. அதோடு கொழுப்பு அளவையும் சீராக பராமரிக்க உதவுகிறது. இதனால் இதய பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கொழுப்பு சத்து சீராக்கமைக்கப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

தேங்காயில் நல்ல கொழுப்பு, விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் என உடலுக்கு தேவையான அனைத்தும் உள்ளன. இவை தேவையற்ற கொழுப்புகள், கெட்ட பாக்ட்டீரியாக்களை அழித்து உடலை சீராக எடையில் பராமரிக்க உதவுகிறது. மற்றும் உணவுக் கலோரிகளையும் எரித்துவிடுகிறது.

சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக முகப்பருக்கள், தழும்புகள், முகச்சுருக்கம் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.

இரவு துக்கும் முன் தேங்காயை ஒரு துண்டு சாப்பிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தூக்கம் வந்து விடும். அதோடு ஆழந்த உறக்கத்தையும் பெறுவீர்கள்.

தேங்காய் ஈஸியா உடைக்க என்ன வழி?

தேங்காயை பல்வேறு சமையல்களில் சேர்த்து சமைக்கும் நமக்கு அவற்றை முறையாக உடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதற்கான ஈஸி ஹேக்கை நங்கள் இங்கு பகிர்ந்துள்ளோம்.

இந்த சிம்பிள் ஹேக்கிற்கு, உங்களுக்கு சுத்தியல் மற்றும் ஸ்க்ரூடிரைவர் போன்ற சில கருவிகள் தேவைப்படும்.

இந்த கருவிகளைப் பயன்படுத்தி, தேங்காயின் கண்களில் துளைகளை இடுங்கள். துளை வழியாக, தேங்காய் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.

இப்போது, ​​சுத்தியலைப் பயன்படுத்தி, தேங்காயைச் சுற்றி மெதுவாகத் தட்டவும்.

தேங்காயைச் சுற்றி ஒரு விரிசல் உருவாகத் தொடங்கும். விரிசல் முடிந்ததும், தேங்காய் சரியாகவும், நேராகவும் உடைந்து விடும்.

தேங்காயில் இருந்து அதன் ஓட்டை அகற்ற, ஒரு கத்தியை ஒட்டி, அதை தேங்காயின் சுற்றளவிற்கு சுற்றி வைக்கவும்.

இடையில் ஒரு ஸ்பூன் ஒட்டி, தேங்காய் ஓட்டில் இருந்து தேங்காயை இழுக்கவும்.

இப்போது தேங்காய் அப்படியே வெளியே வந்து விடும். மற்றும் அவை பயன்படுத்தவும் தயாராக இருக்கும்.

முடி உதிர்வைத் தடுக்க தேங்காயைப் பயன்படுத்தி சிம்பிள் டிப்ஸ்:

முதலில் தேங்காய் ஓட்டில் இருந்து எடுக்கப்பட்ட தேங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின்னர், மிளகு மற்றும் தண்ணீரைக் கலந்து, மிக்சியில் இட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

அதன்பிறகு, அவற்றை எண்ணெய் தேய்ப்பது போல், தலைமுடியில் தடவி, சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு ஊறவைத்த பின்னர் குளிக்கவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.