இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2022 பொது நலவாய விளையாட்டுப் போட்டியில் ,பரா பரிதி வட்டம் எறிதல் போட்டியில் பங்கேற்ற பாலித்த பண்டார, 44.20 மீற்றர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வெற்றிக்கொண்டுள்ளார்.
இந்தப்போட்டியில், வேல்ஸைச் சேர்ந்த அலெட் டேவிஸ் Aled Davies தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டனர்.
ஹெரிஸன் வோல்ஸ் Harrison Walsh வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆறுாவது நாள் நிறைவில், இலங்கை இரண்டு பதக்கங்களை வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.