புதுடில்லி : இந்தியாவில் பண மோசடிகளால், கடந்த மூன்று ஆண்டுகளில் 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக, சமூக ஊடக தளமான, ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய மோசடிகளில் சிக்கியவர்களில், 17 சதவீதம் பேர், அவர்கள் இழந்த பணத்தை மீட்டுள்ளனர். கிட்டத்தட்ட 74 சதவீதம் பேருக்கு, இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இதற்கு முந்தைய ஆய்வில், 29 சதவீதம் பேர், அவர்களது ஏ.டி.எம்., ரகசிய எண் உள்ளிட்ட பல தகவல்களை, குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதாக அறிவித்திருந்தது. மேலும், நான்கு சதவீதத்தினர், உடன் பணியாற்றுபவர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தது.வங்கி கணக்கு, கார்டுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை, ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருப்பது, பண மோசடிகளுக்கு முக்கிய காரணமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடில்லி : இந்தியாவில் பண மோசடிகளால், கடந்த மூன்று ஆண்டுகளில் 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக, சமூக ஊடக தளமான, ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.இத்தகைய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்