7 வருடத்தில் முதல் முறை லேட்டாக வந்த ஊழியர் பணிநீக்கம்.. சக ஊழியர்கள் எடுத்த விநோத முடிவு..!

அலுவலகம் செல்லும் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரில் இது சகஜமான ஒரு விஷயமும் கூட. காலை 9 மணிக்கு செல்ல வேண்டிய அலுவலத்திற்கு 7 மணிக்கே அடித்து பிடித்து செல்லும் ஊழியர்களை பார்க்கலாம்.

எனினும் சில சமயங்களில் தாமதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.

ஆனால் 7 வருடங்களில் முதல் முறையாக தாமதமாக சென்ற ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? இதனை ஏற்க முடிகிறதா? ஆனால் இது உண்மையாக நடந்த ஒரு சம்பவம் தான்.

30000 பேர் பணிநீக்கம்.. அச்சத்தில் இந்திய ஊழியர்கள்..!

 கற்பனை கூட செய்ய முடியவில்லை

கற்பனை கூட செய்ய முடியவில்லை

இதனை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 7 வருடம் சரியாக சென்ற ஒருவர், ஒரு நாள் தாமதமாக சென்று விட்டார். அதற்காக நிறுவனம் பணி நீக்கம் செய்கிறது எனில் அதனை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. எனினும் இதில் ஆறுதலான விஷயம் என்னவெனில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு சக ஊழியர்களும் உறுதுணையாக நின்றது தான்.

மீண்டும் பணியமர்த்தல்

மீண்டும் பணியமர்த்தல்

இதனால் வேறு வழியின்றி பணி நீக்கம் செய்தவரை மீண்டும் பணியில் அமர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த ரெட்டிட் பயனர் ஒருவர் 7 ஆண்டுகளில் ஒரு போதும் தாமதமாக வராத ஒருவர், முதல் முறையாக தாமதமாக வந்ததற்காக பணி நீக்கம் செய்யப்படுகிறார். கடந்த வாரம் நடந்த நிகழ்வின் மூலம் அந்த ஊழியர் முதல் முறையாக 20 நிமிடங்கள் தாமதமாக அலுவலகத்துக்கு வந்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

சக ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு
 

சக ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு

இதனால் கடுப்பான சக ஊழியர்கள் அடுத்த நாளில் இருந்து தாங்களும் அலுவலகத்திற்கு தாமதமாக வருவோம். அவர் மீண்டும் பணியமர்த்தப்படும் வரையில் தாமதமாகத் தான் வருவோம் என்று கூறியுள்ளனர். இதன் பிறகே பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

 பயனர்களின் கருத்து

பயனர்களின் கருத்து

இதற்கிடையில் பல பணியாளர்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு பயனர் தான் 6 ஆண்டுகளில் ஒரு முறை தாமதமாக வந்தது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. நான் மாலை 5 மணிக்கு எனது வேலையில் இருந்து திரும்புவேன். காலை நான் 9.05 மணிக்கு எனது வேலையில் இருந்தேன். இதற்காக என்னை பணி நீக்கம் செய்யவில்லை, ஆனால் முதலாளி கடுமையாக பேசினார். இதனை எனது வருடாந்திர மதிப்பாய்விலும் எழுதினார். நான் சரியான நேரத்தில் வரவேண்டும் என்பதே அடுத்த ஆண்டிற்கான இலக்காகவும் இருந்தது.

போக்குவரத்து நெரிசலால் தாமதம்

போக்குவரத்து நெரிசலால் தாமதம்

இதே மற்றோரு பயனர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு செல்லத் தொடங்கினேன். போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தேன். இது மிகவும் அழுத்தத்தினை ஏற்படுத்தியது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு முறை அழைப்பு விடுத்து அப்டேட் செய்தேன், 36 நிமிட பயணத்திற்கு நான் 4 மணி நேரம் தாமதமாக வந்தேன். அதன் பிறகு ஒரு அறையில் என்னை கூப்பிட்டு கவலை படாதே. நான் ஒரு செக்யூரிட்டியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன், எனக்கு மாற்றாக பணிபுரிய வேண்டியவர் எப்போதும் 20 நிமிடம் தாமதமாகவே வருவார். நான் தினமும் அவரிடம் சொன்ன ஒரு வார்த்தை, நாம் ஒரே சம்பளத்தினை தான் பெறுகிறோம். நான் 8 மணி நேரம் 20 நிமிடம் வேலை செய்கிறேன், நீ 7 மணி நேரம் 40 நிமிடம் பணி புரிகிறாய் என்று.

இப்படி கூட இருப்பார்களா?

இப்படி கூட இருப்பார்களா?

இதே மற்றொரு பயனர் நான் சிறிது காலம் மேற்பார்வையாளராக இருந்தபோது, மோசமான வானிலை இருக்கும்போது , சாதாரணமான நேரத்தில் இருந்து நீங்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்தால், எனக்கு அழைக்கவும் ,மெசேஜ் செய்யவும் வேண்டாம், அதனை பற்றி கவலைப்பட வேண்டாம் என கூறியிருந்தேன், ஏனெனில் அந்த காலகட்டத்தில் அவர்கள் வாகனத்தை இயக்கும் நேரத்தில் இதனை முயற்சிக்க கூடாது என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது என கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

For the first time in 7 years, the late employee was fired

For the first time in 7 years, the late employee was fired/7 வருடத்தில் முதல் முறை லேட்டாக வந்த ஊழியர் பணிநீக்கம்.. சக ஊழியர்கள் எடுத்த விநோத முடிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.