கதாசிரியர் : வசந்தபாலன் ஆதங்கம்

'மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022' என்ற குறும்பட திருவிழாவில் இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது: இந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட ஐந்து குறும்படங்களை பார்த்த போது, இன்றைய இளைஞர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி இயக்கனருக்கான திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இன்றைய படைப்பாளிகளுக்கு டெக்னாலஜி கதவுகள் அகலமாக திறந்தே இருக்கின்றன. அதனால் சாதாரண ஒரு கதையை கூட அழகாக எளிதாக படமாக்க முடிகிறது.

அதேசமயம் தமிழ் சினிமாவில் கதாசிரியர்களே இல்லை. தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம். குறும்படங்களால் இயக்குனர்கள் உருவாகின்றனர் ஆனால், எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவுக்குள் வரவே இல்லை. இனிமேல் கதாசிரியர்களிடம் கதையை பெற்று அதன் பின் நாயகர்களை தேடிச் செல்ல வேண்டும். இயக்குனர்களை போல எழுத்தாளர்களுக்கும் போட்டி வைத்து விருது தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.