பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி: ரிஷி சுனக்குக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த பொதுமக்கள்…


பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பல்வேறு விவாத மேடைகளில் பங்கேற்று விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் ரிஷி சுனக்கும் லிஸ் ட்ரஸ்ஸும். 

விவாத நிகழ்ச்சியை நடத்துபவர் பல்வேறு கேள்விகளை எழுப்புவார், மக்களும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதுண்டு. இந்த விவாதங்களுக்குப் பின், விவாதங்களைக் காணும் பார்வையாளர்கள் வாக்களிப்பதுண்டு.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில், யாரும் எதிர்பாராதவிதமாக, பின்தங்கியிருக்கிறார் என கூறப்படும் ரிஷி சுனக்குக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்த விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள், பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ்ஸுக்கே அதிக ஆதரவு என தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், விவாத நிகழ்ச்சியைக் காணவந்த மக்கள் பெரிய அளவில் ரிஷிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி: ரிஷி சுனக்குக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த பொதுமக்கள்... | The Public Gave Rishi Sunaku An Unexpected Victory

Image – ndtv

மின்னணு வாக்களிப்பு அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் கைகளை உயர்த்தி யாருக்கு தங்கள் ஆதரவு என்பதைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அரங்கத்தில் கூடியிருந்த மக்களில் பெரும்பான்மையோர் கைகளை உயர்த்தி ரிஷிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.

லிஸ் ட்ரஸ், தான் முன்னர் தெரிவித்த சில கருத்துக்களை பின்னர் தான் கூறவேயில்லை, ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டன என்று கூறியிருந்தார். அந்த விடயம் இப்போது சர்ச்சையை உருவக்கியுள்ளது.

இப்படிப்பட்ட ஒரு நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினரின் ஆதரவு ரிஷிக்கு போதுமான அளவு இல்லை என்று கூறப்பட்டாலும், பொதுமக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதை இந்த சம்பவம் காட்டியுள்ளது.

அந்த விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய Kay Burleyயே, தான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என்று கூறி தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் சூழல் அரங்கத்தில் உருவானது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.