பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களை, மீடியம் டெர்ம் வர்த்தகர்கள், இன்ட்ராடே வணிகம், குறுகிய காலம், நீண்டகால வணிகம் என பிரிக்கப்படுகின்றன.
இதில் நீண்டகால வர்த்தகர்களுக்கு தான் இந்த மல்டிபேக்கர் வாய்ப்பானது கிடைக்கிறது.
இப்படி பல மடங்கு லாபம் கொடுத்த 3 பங்குகளை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ரத்தன் டாடாவின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

என்ன பங்குகள் அது?
நான் இன்று பார்க்க விருக்கும் பங்குகள்
1.கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்ஸ்
2. திரிவேணி இன்ஜினியரிங் & இண்டஸ்ட்ரீஸ்
3. டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் தான் அது.
இந்த பங்குகளை 20 வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரர்கள்.

கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்ஸ்
கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்ஸ் பங்கு விலையானது கடந்த ஜூன் 22, 2001ல் 4.10 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று இதன் மதிப்பு சுமார் 874 ரூபாயாகும்.இந்த மல்டிபேக்கர் பங்கானது 21,217.07% ஏற்றம் கண்டுள்ளது.

திரிவேணி இன்ஜினியரிங் & இண்டஸ்ட்ரீஸ்
இதே திரிவேணி இன்ஜினியரிங் & இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது ஜூலை 5, 2002ல் 0.73 ரூபாயாக இருந்தது. ஆகஸ்ட் 5,2022 ஆன இன்று 226 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டு காணப்படுகின்றது. இந்த மல்டிபேக்கர் பங்கானது 30,858.90% ஏற்றம் கண்டுள்ளது.

டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
இதே டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பங்கின் விலையானது ஜனவரி 24, 2002ல் 2.50 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, இன்று 725 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இந்த பங்கானது 28,900% ஏற்றம் கண்டுள்ளது.

கோடிகளில் வருமானம்?
மேற்கண்ட இந்த பங்குகளில் 20 வருடங்களுக்கு முன்பாக 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பானது கோடிகளில் எனலாம்.
கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்ஸ் நிறுவனத்தில் 20 வருடங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 2.13 கோடி ரூபாயாகும்.

சில கோடி வருமானம்?
திரிவேணி இன்ஜினியரிங் & இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 20 வருடங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 3.09 கோடி ரூபாயாகும்.
டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 20 வருடங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 2.9 கோடி ரூபாயாகும்.
Do you know how much 3 multibagger stocks have returned in 20 years?
Do you know how much 3 multibagger stocks have returned in 20 years?/3 தரமான மல்டிபேக்கர் பங்குகள்..ரூ.1 லட்சம் கோடியான கதை.. எவ்வளவு ஆண்டில்.. உங்கள் வசம் இருக்கா?