ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை


தமிழகத்தில் கேளம்பாக்கம் அருகே தனியாக வீடு எடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையை சேர்ந்தவர் கைது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் இரு வாரங்களுக்கு முன் மத்திய சிறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் கடந்த ஜூலை 20-ம் திகதி என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தினர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 இலங்கையர்களை இந்தக் குழு விசாரணை நடத்தியது.

சோதனையின் போது, ​​என்ஐஏ குழு 60 மொபைல் போன்கள் மற்றும் 50 சிம் கார்டுகளுடன் ஒரு மடிக்கணினி கைப்பற்றப்பட்டது. முகாமில் உள்ள குறைந்தபட்சம் 14 கைதிகள் பாகிஸ்தானில் இருந்து கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கைதிகள் இந்தியா மற்றும் இலங்கையில் இயங்கி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக பணியாற்றி வருவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை | Sri Lankan National With Indian Aadhar Arrested Tn

இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், என்ஐஏ அதிகாரி எபிசன் பிரோன்கோ தலைமையிலான குழுவினர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

 இதையொட்டி, கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீட்டில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர் முகமது பைசல் (43) என்றும் இலங்கையின் கொழும்பு நகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தெரிந்தது. மேலும், 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் டெல்லியில் தங்கியிருந்தபோது என்ஐஏ அதிகாரிகள் முகமது பைசல் மீதுவழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை | Sri Lankan National With Indian Aadhar Arrested Tn

பின்னர், தமிழ்நாட்டுக்கு வந்து கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, மகனுடன் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முகமதுபைசல் மட்டும் தையூர் பகுதிக்கு வந்ததாகத் தெரிகிறது.

மேலும், சமீபத்தில் என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்தவருடன் முகமதுபைசல், செல்போனில் பேசியதாகவும் இதன்மூலம், என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு முகமது பைசல் இருப்பிடத்தை அறிந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி முகமது பைசலை அழைத்துச் சென்றனர். இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான ஆதார் அட்டை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.