தட்டில் ஒட்டாமல் இட்லி எடுக்க ஈசி வழி இருக்கு… இதை நீங்க யோசிச்சிங்களா?

இட்லி நமக்குப் பிடித்த மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்று. இது மென்மையான, பஞ்சுபோன்ற, வேகவைத்த, குறைந்த கலோரி உணவாக விரும்பப் படுகின்றன. ஆனால், மென்மையான இட்லிகள் செய்வதற்கு சில விதிகள் உள்ளன. நீங்கள் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், இங்கே சில குறிப்புகள் உள்ளது. அது என்ன என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

புசுபுசு இட்லி                                  

இட்லி மென்மையாக வர, கொள்ளுவை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து இட்லிமாவுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது இட்லி புசுபுசுவென கிடைக்கும்.

இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமையைச் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் இட்லி மென்மையாக இருக்கும்.

ஓட்டாத இட்லி

குக்கரில் இட்லி அவிக்கும்போது எண்ணெய் தடவாமலேயே இட்லி எடுக்க சிம்பிள் டிரிக் இதோ.

முதலில் இட்லித் தட்டுகளைக் கழுவி எண்ணெய் தடவாமல் மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்தபின் தட்டுகளைக் கவிழ்த்து, அதன் மேலே தண்ணீர் தெளிக்கவும். 2 நிமிடங்களுக்குப் பிறகு இட்லிகளை எடுத்தால் ஒரு மாவு கொஞ்சம் கூட ஒட்டாமல் வந்துவிடும். 

புளித்த மாவுக்கு

இட்லி மாவு புளித்து விட்டால், அது வீணாகி விடும். ஆனால், மாவில் 2-3 டம்ளர் தண்ணீர்விட்டு சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் நீர் மேலே தெளிந்து நிற்கும். அதை வடித்துவிட்டால் புளிப்பு போய்விடும்.

அடுத்தமுறை வீட்டில் இட்லி சமைக்கும் போது இந்த குறிப்புகளை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.