கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம்


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் தூக்கி செல்லப்படும் காட்சி என்று ஒரு சிசிடிவி காட்சி வெளியான நிலையில் அது குறித்து அவர் தாய் செல்வி விளக்கமளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த கடலூர் கனியாமூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார்.

மாணவியின் மரணத்தில், பல்வேறு ஐயங்களை எழுப்பிய அவரது தாயார் தொடர்ந்து போராடி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ஆம் திகதி பள்ளியின் முன் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி பெரும் சேதங்களை விளைவித்தது.

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் | Kallakurichi School Death Mother About Cctv Fake

விசாரணை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் மாணவியின் மரணம் குறித்த பல்வேறு ஊகங்களும் பரப்பப்படுகிறது.
அதன்படி மாணவியை 3 பெண்கள்உள்ளிட்ட 4 பேர் தூக்கி செல்வது போன்ற சி.சி.டி.வி. காட்சிகள் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இருந்தும், அவ்வப்போது காட்சிப் பதிவுகள் மட்டும் வெளியாகி வருகின்றன. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி, இது போன்ற சிசிடிவி காட்சிகளை யார் வெளியிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. இது ஒரு அப்பட்டமான பொய்யான சிசிடிவி பதிவு என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.