`செயற்கை கோள்களிலிருந்து சிக்னல் வரவில்லை’- இஸ்ரோவின் அடுத்த நடவடிக்கை என்ன? #SSLV

விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முதன்முறையாக எஸ்.எஸ்.எல்.வி எனப்படும் சிறிய செயற்கை கோள்களுக்கான ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள ஏவுதளத்திலிருந்து காலை 9:18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை பூமிக்கு அருகிலேயே சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. முதல் பயணத்தில் தனது இரண்டு செயற்கைக்கோள்களை தாங்கிச் சென்றது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்.

SSLV-D1/EOS-02 Mission: the launch is scheduled at 9:18 am (IST). Watch LIVE from 08:30 am here: https://t.co/V1Bk6GZoCF pic.twitter.com/ZTYo8NFXac
— ISRO (@isro) August 7, 2022

500 கிலோவரை எடையுள்ள அந்த செயற்கைக்கோள்களை, பூமியிலிருந்து 500 கிலோமீட்டர் தூர சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. முதல் பயணத்தில் பூமியை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோளையும், நாடு முழுவதுமிருந்து பள்ளி மாணவிகள் உருவாக்கிய மற்றொரு செயற்கை கோளையும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் சுமந்து சென்ற இந்த ராக்கெட் ஏவுதல், இஸ்ரோவின் வரலாற்றில் இது மற்றொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
image
இப்படியாக இன்று இரு செயற்கைக்கோள்களுடன் விண்ணுக்கு பாய்ந்த எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட், இரு செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் இன்னும் நிலைநிறுத்தப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. `தற்போது கிடைத்துள்ள தகவல்களில் இருந்து செயற்கைக்கோளின் நிலை குறித்து அறிய முயற்சி செய்து வருகிறோம்’ என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ராக்கெட் செலுத்தப்பட்டு 50 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் செயற்கைக்கோள்களில் இருந்து இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.