சமீபத்திய காலமாக பிளாஸ்டிக் பைகள் தடையானது பரவலாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஒரு புறம் சுற்றுபுற சூழலுக்கு நல்ல விஷயமாக இருக்கும் நிலையில், இது நல்லதொரு தொழில் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பை தடையானது நிச்சயம் பல சிறு தொழில் செய்வோருக்கு நல்ல வாய்ப்பாக அமையலாம். ஏனெனில் பிளாஸ்டிக்களுக்கான மாற்றாக பேப்பர் பைகள் பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வேலையை தூக்கிப்போட்ட கேரள ஜோடி.. ஸ்மார்ட் ஐடியா – சொந்த தொழில்.. செம லாபம்..!

பேப்பர் பை வணிகம்
பிளாஸ்டிக்களுக்கான மாற்றாக பேப்பர் பைகள் விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். இந்தியாவில் இன்று மிக லாபகரமான வணிகங்களில் ஒன்றாக இந்த பேப்பர் பை தயாரிப்பு இருந்து வருகின்றது. குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள், கிராமப்புற பகுதிகளில் செய்ய ஏற்றதொரு வணிகமாகவும் பார்க்கப்படுகிறது.

எதற்காக பேப்பர் பைகள்
பேப்பர் பைகள் பேக்கேஜிங்காகவும். வியாபார யுக்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு விளம்பர பையாகவும் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்திய காலமாக தேவையானது அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் தற்போது பிளாஸ்டிக் தடையும் செய்யப்பட்டுள்ளதால், தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேப்பர் பேக் என்றால் என்ன?
பேப்பர் பை என்பது நெகிழி பைகளுக்கு மாற்றாக, பேப்பர்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பையாகும். இது ஷாப்பிங்கிற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை மறுசுழற்சி செய்தும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆடை வாங்க, ஆடம்பர பொருட்கள் வாங்க என பல வகையான பொருட்களை வாங்க இந்த பேப்பர் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

லாபம் கிடைக்கலாம்
சுற்றுச்சூழலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடையாக, இந்த பேப்பர் பைகள் பயன்படுகின்றன. இவை மண்ணில் மக்காதவை. மண்ணிற்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசுப்பாட்டை ஏற்படுத்துகின்றது. ஆக இதற்கு மாற்று என்பது அவசியமான ஒன்றாகும். இன்று மக்கள் மத்தியில் இது குறித்தான விழிப்புணர்கள் எழத் தொடங்கியுள்ளது. இதுவே எதிர்காலத்தில் இந்த துறை சார்ந்தவர்களுக்கு லாபம் கிடைக்க வழிவகுக்கும்.

எவ்வளவு முதலீடு?
இது பழைய பேப்பர்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பர்கள் என பலவற்றில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. இது ஸ்டார்ட் அப் மற்றும் சிறு தொழிலாக செய்ய தொடங்கியுள்ளன. இதற்காக முதலீட்டாளர்கள் சுமார் 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

எதற்காக பயன்பாடு?
இன்றைய காலகட்டத்தில் பேப்பர் பையை உபயோகிக்காத வீடுகள் கிடையாது. இது மளிகை பொருட்கள் வாங்கி செல்லவும், காய்கறிகள், பழங்கள், மருந்துகள் வாங்கவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. ஆஃப் லைன் மற்றும் ஆன்லைனிலும் இந்த பேப்பர் பைகளே பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர தொழில் துறைகளில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது..

ஏன் விலை அதிகம்
இதற்காக பேப்பர் கட்டிங் மெஷின், பஞ்சிங் மெஷின், பேப்பர் அரவை இயந்திரங்கள் என பலவும்,வாங்க வேண்டியிருக்கும். பிளாஸ்டி பை தயாரிப்பினை விட அதிக எரிபொருள் மற்றும் அதிக தண்ணீர் தேவைப்படுகின்றது. இதனால் பிளாஸ்டிக் பைகளை காட்டிலும் பேப்பர் பைகள் விலைகள் அதிகமாக உள்ளது.

இது தான் மாற்று?
பிளாஸ்டிக் பைகளுக்கு சிறந்த மாற்று, காகிதப் பைகள் தான். இது தவிர நம்மூர் மஞ்சப்பை, கட்டப்பையும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இதன் விலை சற்று அதிகமானதாக இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
How to start paper bags manufacturing business in India
How to start paper bags manufacturing business in India/பிளாஸ்டிக்கு மாற்றான பேப்பர் பை.. நல்ல வருமானம் தரும் சிறு தொழில்..கவனிக்க வேண்டியது என்ன?