பொலிஸ் உத்தியோகத்தரின் முன்மாதிரி

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட் கிட்னண் குலேந்திரன் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3.8.2022 அன்று பணப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

அதனை பரிசோதித்து பார்த்த போது 75520/- பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டுள்ளது. உடனே குறித்த உத்தியோகத்தர் இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபரிடம் சேர்த்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.