இங்கிலாந்தில் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்திய சம்பவம் அடங்குவதற்குள் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர அனுபவம்


*சிசிடிவிக்கள் நிறைந்த ஒரு அறைக்குள் ஆடைகள் அகற்றப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார் ஒரு இளம்பெண்.

*அவரது ஆடைகளை கத்திரியால் முரட்டுத்தனமாக வெட்டி அகற்றியுள்ளார் ஒரு பொலிசார்.

இங்கிலாந்தில் 650 சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சோதனை செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இளம்பெண் ஒருவர் மோசமான அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார்

லண்டனிலுள்ள Lewisham என்ற இடத்தில், அந்தப் பெண்ணை திடீரென சோதனைக்குட்படுத்தியுள்ளார்கள் பொலிசார் இருவர். முதலில் அவரிடம் அந்த அறையில் சிசிடிவி கமெராக்கள் இருப்பது குறித்து தெரிவிக்காமல், அவரை சோதனைக்குட்படுத்தப்போவது குறித்து அவரிடம் கூறி, அவரை சம்மதிக்கவைக்க முயற்சி செய்யாமலே, அவரை ஆடை களைந்து சோதனைக்குட்படுத்தியுள்ளார்கள் பொலிஸ் சார்ஜண்டான Dru Hussey என்பவரும், பெயர் வெளியிடப்படாத பொலிஸ் அதிகாரி ஒருவரும்.

இங்கிலாந்தில் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்திய சம்பவம் அடங்குவதற்குள் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் | Terrible Experience For A Young Woman

image -shutterstock

அத்துடன், அந்த பெயர் வெளியிடாத பொலிஸ் அதிகாரி அந்த இளம்பெண்ணை ஆறு முறை பலமாக குத்தியிருக்கிறார்.

மேலும் ஆடைகளைக் களையச் சொல்லாமல், கத்திரியால் முரட்டுத்தனமாக அந்த இளம்பெண்ணின் ஆடைகளை வெட்டி அகற்றியிருக்கிறார் அந்த பொலிஸ் அதிகாரி.

மொத்தத்தில் அந்தப் பெண்ணின் சுயகௌரவத்துக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் அவரை மிக மோசமாக நடத்தியிருக்கிறார்கள் பொலிசார்.

தற்போது, இந்த விடயங்கள் வெளியானதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை, அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காக, அந்த பொலிசார் இருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்கள்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.