'சொந்தமாக கார் கூட இல்லை' – பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் அசையும், அசையா சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் அசையும் சொத்துக்கள் மட்டுமே இருப்பதாகவும், அதிலும் பெரும்பகுதி வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே உள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  

image
பிரதமருக்கு சொந்தமாக கார்கள் எதுவும் இல்லை. அதேவேளையில், பிரதமர் மோடி சொந்தமாக 1.73 லட்சம் மதிப்பு கொண்ட 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளார். காந்தி நகரில் பிரதமர் மோடிக்குச் சொந்தமாக இருந்த அவரின் பங்கு நிலத்தையும் தானமாக வழங்கிவிட்டார். பிரதமர் மோடி தன்னிடம் ரொக்கமாக 35,250 ரூபாய் மட்டுமே வைத்திருக்கிறார்.
நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அதேபோல், தற்போது இரண்டாவது முறையும் சேர்த்து மொத்தம் 8 ஆண்டுகள் அவர் பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பீகார் அரசியலில் திருப்பம்: பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிந்தது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.