திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சீனிவாசன்(36). இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை சீனிவாசன் சோமனநாயக்கன்பட்டி பச்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உயிரிழந்த சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.