
ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படங்களை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அடுத்து ஜோக்கர், குக்கூ போன்ற படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடிக்கப் போகிறார் கார்த்தி. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் கார்த்தி தனது கெட்டப்பை முழுமையாக மாற்றி நடிக்க போகிறாராம். இதற்காக அவர் பாடிலாங்குவேஜ் மட்டுமின்றி ஹேர் ஸ்டைலையும் முழுமையாக மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.