இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்

Justice U U Lalit appointed 49th CJI: இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித் புதன்கிழமை நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி திரௌபதி முர்மு இதற்கான நியமன உத்தரவில் கையெழுத்திட்டார்.

தற்போதைய தலைமை நீதிபதி என்.வி ரமணா பதவியில் இருந்து பதவி விலகிய பிறகு ஆகஸ்ட் 27 ஆம் தேதி உதய் உமேஷ் லலித் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார்.

இதையும் படியுங்கள்: உ.பி.யில் கோலாகலமாக தொடங்கிய சுதந்திர யாத்திரை; ‘பிரியங்கா எங்கே?’ காங்கிரஸார் கேள்வி

“இந்திய அரசியலமைப்பின் 124 வது பிரிவின் பிரிவு (2) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, 2022 ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் இந்திய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித்தை நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்,” என்று சட்ட அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி உதய் உமேஷ் லலித் மூன்று மாதங்களுக்கும் குறைவான குறுகிய பதவிக்காலத்தைக் கொண்டிருப்பார். நவம்பர் 8ஆம் தேதி பதவி விலகும் போது அவருக்கு 65 வயதாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.