கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் 123 நாட்களுக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது.
இலங்கையில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வராததை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, லட்சக்கணக்கான மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தலைநகர் கொழும்பு அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள காலி முகத்திடலில் கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். இந்த போராட்டத்தின் எழுச்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் அனைவரும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேறினர்.
அதன் பின்னரும் தங்கள் போராட்டத்தை மக்கள் நிறுத்தவில்லை. புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் ரணிலுக்கு எதிராகவும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
கடந்த நாட்களுக்கு முன் அதிபர் மாளிகையில் இருந்த போராட்டக்காரர்களை ராணுவ வீரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றிருந்தது. போராட்டக்காரர்கள் ஆகஸ்டு 5- ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து போராட்டக்காரர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் காலி முகத்திடல் போராட்டத்தை முறைப்படி முடித்துக்கொள்வதாக நேற்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
அத்துடன் திடலில் இருந்து வெளியேறும் பணிகளையும் அவர்கள் தொடங்கினர். இதன் மூலம் இலங்கை அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் 123 நாட்களுக்குப்பின் முடிவுக்கு வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement