மும்பையில் சமீபத்திய காலமாக ரியல் எஸ்டேட் துறையானது வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. குறிப்பாக விலையுயர்ந்த வீடுகள் விற்பனை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பல தொழிலதிபர்களின் இருப்பிடமாக இருக்கும் மும்பையில் விலை உயர்ந்த வீடுகள் இருப்பது பெரிய விஷயம் இல்லை தான்.
எனினும் மும்பையில் உள்ள 7 மிக விலையுயர்ந்த வீடுகள் எது? இந்த சொகுசு வீடுகள் யாருக்கு சொந்தமானது? அதன் மதிப்பு என்ன? மற்ற முக்கிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மளமளவென சரியும் மக்கள் தொகை.. குழப்பத்தில் 20 நாடுகள்..!

ஆண்டிலியா வீடு
இந்த 7 வீடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பில்லியனரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் நிறுவனருமான முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு தான். இது விலையுயர்ந்த வீடு என்பதை விட சொர்க்கம் என்று தான் கூற வேண்டும். இங்கு மக்கள் வாழ்வதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் உள்ளது. 27 மாடிகளை கோண்ட இந்த வீட்டில், ஹெலிபேட், ஹெல்த் கிளப், ஸ்பா, ஜிம், அவுட்டோர் கார்டன், சினிமா, பார்க்கிங், யோகா மையம், டேன்ஸ் ஸ்டுடியோ, ஐஸ் க்ரீம் பார்லர், கோவில் என சகல அம்சங்களையும் கொண்ட ஒரு சொகுசு மாளிகையாக உள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 15,000 கோடி ரூபாயாகும்.

ஜாதியா ஹவுஸ்
தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான இந்த ஜாதியா ஹவுஸ், மலபார் ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 28,000 சதுர அடியாகும். இதன் மதிப்பு சுமார் 425 கோடி ரூபாய். பல்வேறு சொகுசு வசதிகளை கொண்ட இந்த வீடு அழகிய குளம், பழங்கால கட்டமைப்பு, பளிங்கு கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

குலிதா
இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல்-க்கு சொந்தமான வீடு தான் இந்த குலிதா. சொகுசு வசதிகளை கொண்ட இந்த வீடு, வோர்லி பகுதியில் அமைந்துள்ளது. 50,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீட்டின் மதிப்பு 452 கோடி ரூபாயாகும். இந்த வீட்டில் மாடியில் அமர்ந்து நகரின் அழகை ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

லிங்கன் ஹவுஸ்
இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் சைரஸ் பூனவல்லா. இவரின் வீட்டின் பெயர் தான் லிங்கன் ஹவுஸ். இது முன்னதாக வான்கனர் என்று அழைக்கப்பட்டது. இது நகரத்தின் மிக விலையுயர்ந்த பாரம்பரிய சொத்துகளில் ஒன்றாகும். இது மும்பையில் ப்ரீச் கேண்டி பகுதியில் 50,000 சதுர அடியில் அமைந்துள்ளது. இதன் மதிப்பு 750 கோடி ரூபாயாகும்.

மன்னத்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான வீடு தான் மன்னத். இதன் மதிப்பு 200 கோடி ரூபாயாகும். மும்பை பாந்த்ராவின் உள்ள சொகுசு வீடுகளில் இதுவும் ஒன்றாகும். 6 மாடிகளைக் கொண்ட இந்த வீடு, பல சொகுசு வசதிகளை கொண்டது. இதில் பல பழங்கால பொருட்கள் மற்றும் ஓவியங்கள் என பலவும் நிறைந்துள்ளது.

ரத்தன் டாடா வீடு
மும்பையின் கொலாபாவில் அமைந்துள்ள தொழிலதிபர் ரத்தன் டாடாவின் குஷி இல்லம், 150 கோடி ரூபாய் மதிப்பிலான வீடாக உள்ளது. இதில் ரத்தன் டாடாவின் மென்மையான குணத்திற்கு ஏற்ப, இந்த வீடு நூலகம், உடற்பயிற்சி, என வழக்கமான பல சொகுசு வசதிகளையும் கொண்டுள்ளது.

ஜால்சா
பாலிவுட் பிரபலமான அமிதாப் பச்சனின் ஜால்சா வீடு, மும்பையில் ஹூஹுவில் அமைந்துள்ளது. பல ஆடம்பர சொகுசு வசதிகளை கோண்ட இந்த வீட்டிற்கு மான்சா என்று அழைக்கப்பட்டது. எனினும் ஜால்சா என பின்னர் மாற்றப்பட்டது. 10123 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 120 கோடி ரூபாய் ஆகும்.
Do you know who owns the 7 most expensive houses in Mumbai?
Do you know who owns the 7 most expensive houses in Mumbai?/மும்பையில் மிகவும் காஸ்ட்லியான வீடுகளின் சொந்தக்காரர்கள் இவர்கள் தான்..!