புனே-வைச் சேர்ந்த ரூபாய் கூட்டுறவு வங்கியின் (Rupee Cooperative Bank) உரிமத்தை ரத்துச் செய்ததாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது, செப்டம்பர் 22, 2022 முதல் வங்கிச் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டது.
ரூபாய் கூட்டுறவு வங்கிக்கு “போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள்” இல்லை என்பதால் வங்கியின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் கூட்டுறவு வங்கி, சரஸ்வத் வங்கியுடன் வங்கியுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டு ரிசர்வ் வங்கியின் கொள்கை அனுமதியைப் பெற்ற பிறகு தோல்வியடைந்த நிலையில் தற்போது இவ்வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
70 நாடுகளில் முதலீடு செய்த சீனா.. அடுத்தது யாரெல்லாம் திவாலாக போகிறார்கள்..!

ரூபே கூட்டுறவு வங்கி
ரூபே கூட்டுறவு வங்கி 64,000 பேருக்கு மேல் தங்களது டெபாசிட் தொகையை மொத்தம் ₹700 கோடியை திருப்பிச் செலுத்திய பின், சரஸ்வத் வங்கி இணைப்பிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 700 கோடி ரூபாய் வைப்பு நிதி வெளியேறிய நிலையில் வர்த்தக லாபங்கள் குறைந்த காரணத்தால் மறுப்புத் தெரிவித்தது.

ரிசர்வ் வங்கி
ரூபாய் கூட்டுறவு வங்கியின் வைப்புதாரர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது, வங்கி அதன் தற்போதைய நிதி நிலையில் டெபாசிட்தாரர்களுக்குப் பணத்தை முழுமையாகத் திருப்பிச் செலுத்த முடியாது என்றும் ரிசர்வ் வங்கி அதன் உத்தரவில் கோடிட்டுக் காட்டியது.

5 லட்சம் ரூபாய் வரை
உரிமம் பெற்ற வங்கிகளில் பணம் வைத்திருக்கும் டெபாசிட்டர்கள் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். ரூபாய் கூட்டுறவு வங்கி கலைக்கப்பட்டதும், தற்போதுள்ள டெபாசிட்தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் அமைப்பிடமிருந்து டெபாசிட் காப்பீட்டுக் கோரிக்கையைப் பெற உரிமை பெறுவார்கள் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

99% பேருக்கு
99% க்கும் அதிகமான டெபாசிட்தாரர்கள் தங்கள் வைப்புத் தொகையின் முழுத் தொகையையும் பெறுவதற்கு உரிமை உடையவர்கள் என்று ஆர்பிஐ உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1% டெபாசிட்தாரர்கள் ₹5 லட்சத்துக்கும் அதிகமான வைப்பு தொகையை இழக்க நேரிடும்.
ஐடி ஊழியர்கள் சோகம்.. 70% சம்பள உயர்வு கதையெல்லாம் மலை ஏறிவிட்டது..!
RBI cancels license of Pune-based Rupee Cooperative Bank
RBI cancels license of Pune-based Rupee Cooperative Bank வங்கி உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி.. டெப்பாசிட் செய்தவர்களின் நிலை என்ன..?