தூத்துக்குடி மாவட்டத்தில் வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் யோனாஸ். இவரது மனைவி சகாயதனியா (24). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்குவதற்காக சென்று உள்ளனர்.
அப்பொழுது குரூஸ்புரம் அருகே சென்ற மோட்டார் சைக்கிள், அப்பகுதியில் இருந்த வேகத்தடையில் எதிர்ப்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சகாயதனியாவை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சகாயதனியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.