இந்தியா உட்படப் பல நாடுகள் இன்னும் கொரோனா தொற்றில் இருந்து மீளாத நிலையில், monkeypox பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த நிலையில் சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று 30க்கும் அதிகமானோரைத் தாக்கியுள்ளது.
சர்வதேச பொருளாதாரம் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வட்டி விகிதங்களைத் தொடர்ந்து அதிகரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யும் நேரத்தில் சீனாவின் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வைரஸ் தொற்றுகள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
Robotaxi: ஓரே நேரத்தில் அமெரிக்கா, சீனா நிறுவனங்கள் அறிவிப்பு..!

லாங்யா ஹெனிபாவைரஸ்
சீனாவில் விலங்குகளில் இருந்து உருவான புதிய வகை வைரஸ் பல பேரை தாக்கியுள்ளது, ஹெனிபவைரஸ் இது ‘லாங்யா’ ஹெனிபாவைரஸ் (Langya henipavirus – LayV) என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு சீனாவின் ஹெனான் மற்றும் ஷான்டாங் மாகாணங்களில் இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹெனான் மற்றும் ஷான்டாங்
ஹெனான் மற்றும் ஷான்டாங் மாகாணங்களில் லாங்யா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல் முதல் அறிகுறியாக உள்ளது, மேலும் நோயாளிகளின் தொண்டை மாதிரிகளில் லாங்யா வைரஸ் கண்டறியப்பட்டது.

75% உயிரிழப்பு பாதிப்பு
கடுமையான நோய்த்தொற்று ஏற்பட்டால் மனிதர்களில் முக்கால்வாசி பேர் வரை கொல்லும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது லாங்யா ஹெனிபாவைரஸ் (LayV) வைரஸ். இருப்பினும், புதிய வழக்குகள் எதுவும் இதுவரை மரணத்தை ஏற்படுத்தவில்லை மற்றும் பெரும்பாலானவை லேசானவை என்றும் கூறப்படுகிறது.

உக்ரைன்
உணவு பொருட்கள் விநியோகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில் உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 12க்கும் அதிகமான கப்பல்களில் பல தரப்பட்ட உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி துவங்கப்பட்டு உள்ளது. இதேபோல் சீனாவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்து உற்பத்தி பணிகள் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது.

பணவீக்கம்
இதேவேளையில் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவும், உற்பத்தி பொருட்களின் விலை வாசி உயர்வாலும் உலக நாடுகளில் பணவீக்கம் பல வருட உச்சத்தைத் தொட்டு ரெசிஷனுக்குச் செல்லும் நிலை பல நாடகளில் உருவாகியுள்ளது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற வல்லரசு நாடுகளும் அடக்கம்.

நிபா வைரஸ் குடும்பம்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வௌவால்-களில் உருவாகும் நிபா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த லாங்யா வைரஸ் தற்போது 35 பேரை தாக்கியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களில் முக்காவாசி பேர் உயிரிழக்கக்கூடிய அபாயம் இருக்கும் நிலையில் இந்த வைரஸ்-க்கு மருந்து, வேக்சின் ஆகியவை இல்லாதது உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலீட்டு சந்தை
ஏற்கனவே வட்டி விகித உயர்வாலும், வர்த்தகப் பாதிப்பாலும் பொருளாதாரம், வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகப்படியான பாதிப்பு உருவாகியிருக்கும் வேளையில் லாங்யா வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும், பிற நாடுகளுக்கும் பரவினால் மீண்டும் முதலீட்டுச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Mild அறிகுறிகள்
கோவிட் 19 வைரஸ்-ஐ காட்டிலும் பல மடங்கு ஆபத்து கொண்ட வைர்ஸ் ஆகப் பார்க்கப்படும் லாங்யா வைரஸ்-ம் மூச்சுக்காற்று மூலம் பரவக்கூடியது தான். மேலும் இந்த வைரஸ் கொரோனா போல் பரவினால் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் தற்போது கிடைத்திருக்கும் நல்ல தகவல் என்னவென்றால் லாங்யா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் Mild அறிகுறிகள் கொண்டவர்கள் என்பது தான்.
New Langya virus in China, 35 people infected; Does indians and Indian Investors should worry
New Langya virus in China, 35 people infected; Does indians and Indian Investors should worry | Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?