அக்னிபாத் திட்டத்திற்கான முதல் ஆள் சேர்ப்பு பேரணி புனேவில் தொடக்கம்.!

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17 1/2 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அக்னிபாத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றுவார்கள் என்றும், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மட்டும் தான் கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு பணியில் தொடர்ந்து வேலை செய்வார்கள் என்றும், மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வேலையை விட்டு அனுப்பபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல மாநிலஙகளில் போராட்டங்களும் வன்முறைகளும் ஏற்பட்டன. மேலும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன. இருப்பினும் மத்திய அரசும், இந்திய ராணுவமும் இந்த திட்டத்தில் உறுதியாக இருந்தன.
image 
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு ஆள் சேர்க்கும் பேரணி புனே மண்டலத்தில் அவுரங்காபாத்தில் வரும் சனிக்கிழமை தொடங்கும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மற்றும் இது எட்டு கட்ட பேரணிகளாக நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பேரணி ‘ பெண்களுக்கான அக்னிவீர்’ திட்டத்திற்கும் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்களிடம் இருந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், திட்டத்திற்க்கு போதுமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.