இந்தியாவில் 75வது சுதந்திர தினம்… சுதந்திர தினமே கொண்டாடாத நாடுகள் எவை எவை தெரியுமா?

இந்தியா கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் வாங்கிய நிலையில் 75வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே சுதந்திர தின கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது என்பதும் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் சுதந்திரக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க பலர் சுதந்திரக் கொடியை ஏற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நகரங்கள், கிராமங்கள் உள்பட பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் பள்ளி கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழா விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுதந்திர தினத்தையே கொண்டாடாத சில நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாடுகள் எவை எவை என்பது தற்போது பார்ப்போம்.

12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!

நேபாளம்

நேபாளம்

நேபாளத்திற்கு சுதந்திர தினம் என்பதே கிடையாது. மற்ற நாடுகளை போலல்லாமல் நேபாளத்தை எந்த நாடும் படையெடுக்கவில்லை. புவியியல் ரீதியாக சிறியதாக இருந்தாலும், அந்நிய தேசத்தால் ஒருபோதும் காலனித்துவப்படுத்தப்படாத உலகின் சில நாடுகளில் நேபாளமும் ஒன்றாகும். நேபாளம் ஒரு இறையாண்மை தேசமாக இருந்து வருகிறது மற்றும் சீனாவிற்கும் பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் இடையில் ஒரு சுமூக உறவு கொண்ட நாடாக செயல்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்

டென்மார்க்

டென்மார்க் சுதந்திர தினம் கொண்டாடாத அவசியம் இல்லாத ஒரு நாடு. ஏனெனில் எந்த ஒரு நாட்டாலும் ஆக்கிரமிக்கப்படவில்லை. இருப்பினும், ஜூன் 5 அன்று அரசியலமைப்பு தினத்தை டென்மார்க் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதும், இது அவர்களின் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு வந்த நாளை குறிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து
 

தாய்லாந்து

19 ஆம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதி ஏகாதிபத்திய சக்திகளால் காலனித்துவப்படுத்தப்பட்டபோது தாய்லாந்து ஒரு சுதந்திரமான நாடாகவே இருந்தது. இன்றுவரை இந்நாடு ஒருபோதும் படையெடுக்கப்படவில்லை என்பதால் விடுதலைக்காக போராட வேண்டிய அவசியமும் அந்நாட்டுக்கு ஏற்படவில்லை. இருப்பினும் தாய்லாந்து நாட்டில் தேசிய தினம் டிசம்பர் 5 அன்று கொண்டாடப்படுகிறது.

கனடா

கனடா

கனடா ஜூலை 1 அன்று கனடா தினத்தை கொண்டாடினாலும் அந்நாட்டுக்கு சுதந்திர தினம் என்பதே கிடையாது. 1867 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிரிட்டிஷ் வட அமெரிக்கா சட்டம் (பிஎன்ஏ) கனடாவின் டொமினியனை ஒரு சுய-ஆளும் நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனவே ஜூலை 1ஆம் தேதி கனடா தினம் என கொண்டாடப்படுகிறது.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரெஞ்சுப் புரட்சி என்பது ஒரு அடக்குமுறை முடியாட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாளை அந்நாட்டு மக்கள் கொண்டாடினாலும், எந்த ஒரு வெளிநாடும் பிரான்ஸ் நாட்டை அடிமைப்படுத்தி அதன்பின் சுதந்திரம் கொடுத்த வரலாறு இல்லை. எனவே பிரான்ஸ் நாடும் சுதந்திர தினம் இல்லாத நாடுகளில் ஒன்றாகும்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யா முன்னர் சோவியத் யூனியன் அல்லது யுஎஸ்எஸ்ஆர் என்று இருந்தது. இது 1922 முதல் 1991 வரை யூரேசியாவின் பெரும்பகுதியை பரப்பிய ஒரு கண்டம் என்று அழைக்கப்பட்டது. ஆனால் யுஎஸ்எஸ்ஆர் பல நாடுகளாக பிரிந்த பிறகு ரஷ்யா தனி நாடாக மாறியது. ஆனால் அது எந்த நாட்டாலும் காலனித்துவப்படுத்தப்படவில்லை.

சீனா

சீனா

சீனா பல நூற்றாண்டுகளாக மன்னர்களால் ஆளப்பட்டு வருகிறது. எனவே பிரிட்டிஷ் உள்பட எந்த நாடும் சீனாவை அடிமைப்படுத்தவில்லை. எனவே சீனாவிலும் சுதந்திர தினம் என்பதே கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian Independence Day.. Did you know these countries don’t have an Independence Day?

Indian Independence Day.. Did you know these countries don’t have an Independence Day? | இந்தியாவில் 75வது சுதந்திர தினம்… சுதந்திர தினமே கொண்டாடாத நாடுகள் எவை எவை தெரியுமா?

Story first published: Friday, August 12, 2022, 15:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.