மட்டக்களப்பு சிறைச்சாலையில் நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்றைய தினம் (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய சுகாதார பணிமனை ஊடாக பல்வேறு கொரோனா தடுப்பு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதன் முதற்கட்டமாக அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நேற்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் 136 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் 555 சிறைக்கைதிகளுக்கும் குறித்த பூஸ்டர் தடுப்பசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.