பாங்காக் :’ஹோட்டலில் தங்கிஉள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியே வர வேண்டாம்’ என தாய்லாந்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றதால் வெகுண்டு எழுந்த மக்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
இதை முன்கூட்டியே அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி மாலத்தீவுக்கு சென்றார். பின், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு ‘விசா’ காலம் முடிந்ததால், அவர் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு சென்றுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ள கோத்தபயவுக்கு, அந்நாட்டு போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது.கோத்தபய எந்த ஹோட்டலில் தங்கியுள்ளார் என்ற தகவலை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை.ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹோட்டலை விட்டு வெளியே வர வேண்டாம் என அவருக்கு தாய்லாந்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement