தட்சிண கன்னடா : மங்களூரு காடிபள்ளா தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களின் கையில் இருந்த ராக்கியை, ஆசிரியர்கள் அறுத்து எறிந்ததால், கோபமடைந்த பெற்றோர், பா.ஜ., தொண்டர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.தட்சிண கன்னடா, மங்களூரின், காடிபள்ளாவில் தனியார் கிறிஸ்துவ பள்ளி உள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, மாணவர்கள் கையில் ராக்கி கட்டிக்கொண்டு, நேற்று முன் தினம் பள்ளிக்கு வந்திருந்தனர்.
இதை கவனித்த சில ஆசிரியர்கள், மாணவர்களின் கையில் கட்டியிருந்த ராக்கியை அறுத்து, குப்பை தொட்டியில் போட்டனர். இதையறிந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பினர். அப்போது பா.ஜ., தொண்டர்களும், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தகவலறிந்து அங்கு வந்த, சூரத்கல் போலீசார், சூழ்நிலையை சரி செய்தனர். இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், கல்வி நிறுவனத்தின் பாதிரியாருக்கும் மாணவர்களின் பெற்றோர் ராக்கி கட்டினர்.
தட்சிண கன்னடா : மங்களூரு காடிபள்ளா தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களின் கையில் இருந்த ராக்கியை, ஆசிரியர்கள் அறுத்து எறிந்ததால், கோபமடைந்த பெற்றோர், பா.ஜ., தொண்டர்கள் பள்ளியை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்