சென்னை,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023-27 ஆண்கள் கிரிக்க்கெட் அணியின் சுற்றிப்பயண பட்டியலை வெளியிட்டு உள்ளது. 2023-27 சுழற்சியில் 12 நாடுகள் மொத்தம் 777 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார்கள். , இது கடந்த 694 போட்டிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இந்த காலகட்டத்தில் 12 நாடுகள் 173 டெஸ்ட், 281 ஒருநாள் மற்றும் 323 டி20 போட்டிகளில் விளையாட உள்ளன.
2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டு காலங்களில் இந்தியா மொத்தம் 141 சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றுக்கொன்று எதிராக இரண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளன.
இந்தியா ஜனவரி 2024 மற்றும் ஜூன் 2025 இல் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டு காலங்களில் இந்தியா பாகிஸ்தானுடன் எந்த தொடரிலும் விளையாடவில்லை.
இந்தியா ஜூலை 2023 முதல் ஜனவரி 2027 வரை நான்கு முழு முத்தரப்பு தொடர்களில் விளையாட உள்ளது. இந்தியா நான்கு முழு முத்தரப்பு தொடர்களில் தலா ஒரு முறை மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து மற்றும் இரண்டு முறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது.
| Date | Opposition | Venue | Test | ODI | T20I | 
| ஜூன் 2022 | தென்ஆப்பிரிக்கா | Home | 5 | ||
| ஜூன் 2022 | அயர்லாந்து | Away | 2 | ||
| ஜூலை 2022 | இங்கிலாந்து | Away | 1 | 3 | 3 | 
| ஜூலை-ஆகஸ்ட்டு 2022 | வெஸ்ட்இண்டீஸ் | Away | 3 | 5 | |
| ஆகஸ்ட்டு 2022 | ஜிம்பாப்வே | Away | 3 | ||
| செப்டம்பர் 2022 | ஆஸ்திரேலியா | Home | 3 | ||
| செப்-அக்2022 | தென்ஆப்பிரிக்கா | Home | 3 | 3 | |
| நவம்பர் 2022 | நியூசிலாந்து | Away | 3 | 3 | |
| டிசம்பர் 2022 | வங்காளதேசம் | Away | 2 | 3 | |
| ஜனவரி 2023 | இலங்கை | Home | 3 | 3 | |
| ஜனவரி 2023 | நியூசிலாந்து | Home | 3 | 3 | |
| பிப்ரவரி 2023 | ஆஸ்திரேலியா | Home | 4 | 3 | |
| ஜூலை 2023 | வெஸ்ட்இண்டீஸ் | Away | 2 | 3 | 3 | 
| செப்டம்பர் 2023 | ஆஸ்திரேலியா | Home | 3 | ||
| நவம்பர் 2023 | ஆஸ்திரேலியா | Home | 5 | ||
| டிசம்பர் 2023 | தென்ஆப்பிரிக்கா | Away | 2 | 3 | 3 | 
| ஜனவரி 2024 | இங்கிலாந்து | Home | 5 | ||
| ஜூலை 2024 | இலங்கை | Away | 3 | 3 | |
| செப்டம்பர் 2024 | வங்காளதேசம் | Home | 2 | 3 | |
| அக்டோபர் 2024 | நியூசிலாந்து | Home | 3 | ||
| நவம்பர் 2024 | ஆஸ்திரேலியா | Away | 5 | ||
| ஜனவரி 2025 | இங்கிலாந்து | Home | 3 | 5 | |
| ஜூன் 2025 | இங்கிலாந்து | Away | 5 | ||
| ஆகஸ்ட்டு 2025 | வங்காளதேசம் | Away | 3 | 3 | |
| அக்டோபர் 2025 | வெஸ்ட்இண்டீஸ் | Home | 2 | ||
| அக்-நவ 2025 | ஆஸ்திரேலியா | Away | 3 | 5 | |
| நவம்பர் 2025 | தென்ஆப்பிரிக்கா | Home | 2 | 3 | 5 | 
| ஜனவரி 2026 | நியூசிலாந்து | Home | 3 | 5 | |
| ஜூன் 2026 | ஆப்கானிஸ்தான் | Home | 1 | 3 | |
| ஜூலை 2026 | இங்கிலாந்து | Away | 3 | 5 | |
| ஆகஸ்ட்டு 2026 | இலங்கை | Away | 2 | ||
| செப்டம்பர் 2026 | ஆப்கானிஸ்தான் | Away | 3 | ||
| அக்டோபர் 2026 | வெஸ்ட்இண்டீஸ் | Home | 3 | 5 | |
| அக்-நவ 2026 | நியூசிலாந்து | Away | 2 | 3 | 5 | 
| டிசம்பர் 2026 | இலங்கை | Home | 3 | 3 | |
| ஜனவரி 2027 | Home | 5 | 
