தமன்னாவின் புதிய அவதாரம்! வியந்து பார்க்கும் மற்ற நடிகைகள்

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா, இப்போது கோலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்கும் அவர், புதியதாக பான் இந்தியா படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். பிரபல ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அந்தப் படத்தை இயக்குபவர் பிரபல பாலிவுட் இயக்குநரான மதுர் பண்டர்க்கார். தேசிய விருதுகளை வென்ற இயக்குநரான அவர், பெண்களை முதன்மைப்படுத்தும் கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவர்.

 ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் பவுன்சர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.  இந்தியாவின் உண்மையான ‘பவுன்சர் நகரமான’ அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாகும். பிப்ரவரி 18 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்ததாக  நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டப்பிங் பணிகளை சில நாட்களுக்கு முன் நடிகை தமன்னா தொடங்கி முடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் மதுர் பண்டர்க்கார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா உடன் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதை மற்றும் திரைக்கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் எழுதி உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் இரண்டு லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களிலும் தமன்னா பாட்டியா பவுன்சர் கெட்டப்பில் இருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.