இன்னும் ரெண்டு நாட்கள் தான்… திமுகவிற்கு தாவும் முக்கியப் புள்ளிகள்- செந்தில் பாலாஜி சர்ப்ரைஸ்!

கோவை ஈச்சனாரி பகுதியில் முதல்வர்

கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெறும் ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி கோவை வருகை தருகிறார்.

இதையடுத்து ஈச்சனாரி பகுதியில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். நாட்டிலேயே இவ்வளவு பேருக்கு ஒரே மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது இதுவே முதல்முறை என்று பெருமிதம் கொண்டார். வரும் 24ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்ட மேடையில் யார் இருக்கிறார்கள்.

கீழே யார் இருக்கப் போகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள் என்றார். தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு 70 கோடி ரூபாய் நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்று மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி போர்டலில் சரிபார்க்கும் வசதியும், செலுத்தக் கூடிய தொகைக்கு சரிவர கணக்கு வைத்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்த வலியுறுத்தப்படும் என்றார்.

பல்வேறு துறைகளுக்கு வழங்கக் கூடிய நிலுவை தொகைகளை மத்திய அரசு காலம் தாழ்த்தி அளிக்கிறது. இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மின்சார சட்டத் திருத்த மசோதாவிற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இது என்ன அரசியல் கபட நாடகமா? எனக் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசை பொறுத்தவரை எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அண்ணாமலை வேலை வெட்டி இல்லாத நபர். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. ஊடகங்களை சந்தித்து ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதை தவிர்த்து விடலாம் எனக் குறிப்பிட்டார். சென்னை பெரும்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின் கட்டணம் தொடர்பான குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

“அமைச்சர் பிடிஆர்-க்கு கொஞ்சம் கூட தகுதி இல்லை” – வெளுத்து வாங்கிய வானதி!

அதற்கு இரண்டு ஆண்டுகள் சலுகைகளை அனுபவித்து விட்டு அப்போதெல்லாம் மின் கட்டணம் செலுத்தாமல், இப்போது சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த கால அரசு செய்த தவறை நாம் தொடர முடியாது. மிகுந்த கடனில் தவித்து கொண்டிருக்கிற மின்சார வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி மின்சார வாரியத்தை சரிவர நடத்தி வருகிறார் நமது தமிழக முதல்வர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.