நடிகர்கள் யாரும் இல்லாமல் நடந்த புஷ்பா 2 பூஜை…அல்லு அர்ஜுன் கூட வரலியே

ஐதராபாத் : டைரக்டர் சுகுமாறன் இயக்கத்தில் தெலுங்கு டாப் ஸ்டார் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் பான் இந்தியா படமாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மாஸ் ஹிட் கொடுத்த படம் புஷ்பா.

இதில் ஒரே ஒரு பாடலுக்கு அயிட்டம் சாங் ஆடி செம ஃபேமஸ் ஆகி விட்டார் சமந்தா. இவர் ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் உலக அளவில் அதிகளானவர்களால் ரசிக்கப்பட்ட பாடலாக உள்ளது.

புஷ்பா 2 லோடிங்

புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படம் பற்றி பல மாதங்களாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் படக்குழு சார்பில் எந்த அறிவிப்பும் இல்லை.

இது தான் பட கதை

இது தான் பட கதை

ஆந்திர வனப்பகுதியில் நடக்கும் செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட புஷ்பா படத்தில், ஒரு சாதாரண மரம் வெட்டும் தொழிலாளி பிறகு எப்படி அந்த கூட்டத்திற்கே தலைவன் ஆகிறான் என்பது தான் புஷ்பா படத்தின் கதை. தற்போது புஷ்பா எவ்வாறு சர்வதேச மான்ஸ்டராக வளர்க்கிறான் என்பது தான் புஷ்பா 2 படத்தின் கதை.

ஹீரோ இல்லாத பட பூஜை

ஹீரோ இல்லாத பட பூஜை

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. ஆனால் இதில் படத்தில் நடிக்கும் எந்த நடிகர், நடிகையும் இல்லாமல் நடந்தது. படத்தின் தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பூஜையில் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோவான அல்லு அர்ஜுன் தற்போது அமெரிக்கா சென்றுள்ளதால் அவரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஷுட்டிங் எப்போ ஆரம்பம்

ஷுட்டிங் எப்போ ஆரம்பம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் 15 ம் தேதிக்கு பிறகு எந்த நேரமும் துவங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 2023 ம் ஆண்டின் இரண்டாவது பாதியல் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்திற்கு 1000 கோடி வரை பட்ஜெட் தொகை செலவிடப்படலாம் என சொல்லப்படுகிறது.

மீண்டும் இணையும் டீம்

மீண்டும் இணையும் டீம்

புஷ்பா 2 படத்திலும் ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்க உள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமந்தாவிற்கு பதில் அயிட்டம் சாங் ஆட பாலிவுட் பிரபல நடிகை ஒருவரிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.இந்த சமயத்தில் புஷ்பா 2 பட பூஜை போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.