பள்ளிப்பட்டு: குடிபோதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் பழைய காலனியைச் சேர்ந்தவர் சஞ்சய்(18) 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகின்றது. மது பழக்கத்திற்கு அடிமையாகி பணம் கேட்டு பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு அவரது கூரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இச் சம்பவம் குறித்து புகாரின் பேரில் பள்ளிப்பட்டு எஸ்.ஐ. நாகபூஷணம் மற்றும் போலீசார் கிராமத்திற்கு சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் வாலிபர் இறந்ததாக கூறப்படும் அதே நிலையில் கடந்த சில நாட்களாக கஞ்சா பறிமுதல் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் கஞ்சா கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.