ரியல் எஸ்டேட், டெக் நிறுவனங்கள், அதிகரித்து வரும் கடன், கொரோனா, உற்பத்தி அளவை உயர்த்த முடியாத நிலை, ரீடைல் சந்தை தொடர் சரிவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையிலும் சீனா தைவான் நாட்டைக் கைப்பற்றத் துடிக்கிறது.
இப்படிச் சுத்தி சுத்தி அடிவாங்கும் சீன அரசுக்கு பெரும் தலைவலியாக அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் அதிகப்படியான நஷ்டத்தைப் பதவி செய்து வருகிறது என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இதற்கு முதலும் முக்கிய உதாரணமாக விளங்குவது சியோமி.
இந்த 3 பங்குகள் உங்களிடம் இருக்கா.. இல்லாட்டி வாங்கி வைங்க.. 15% லாபம் கொடுக்கலாம்!

சியோமி
ஜூன் 2022 இல் முடிவடைந்த காலாண்டில் சியோமி நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு ஜூன் காலாண்டைக் காட்டிலும் 83 சதவீதம் குறைந்து சுமார் 204 மில்லியன் டாலர் அதாவது சீனா நாணயத்தின் படி 1.39 பில்லியன் யுவான் பெற்றுள்ளது.

வருவாய்
இதே காலகட்டத்தில் சியோமி நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் சரிந்து 70.2 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. இது சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் சீன அரசுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் ஏற்றுமதி செய்வதில் சியோமி உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாக இருக்கும் வேளையில் பெய்ஜிங்கில் இருக்கும் சியோமி தலைமை அலுவலகத்தின வெளியிட்டப்பட்ட காலாண்டு முடிவில் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வணிகம் சுருங்குவதால் வருவாய் 20 சதவீதம் குறைந்து 70.1 பில்லியன் யுவானாக உள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

லேய் ஜூன்எ
சீன பில்லியனர் தொழிலதிபர் Lei Jun தலைமையில் இயங்கும் சியோமி பங்குகள் வர்த்தகம் செய்யப்படும் ஹாங்காங் சந்தையில் லாபம் மற்றும் வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக இன்று 3.26 சதவீதமும், 2022ல் 40 சதவீதமும் சரிந்துளஅளது.

Canalys ஆய்வு
பலவீனமான தேவை காரணமாக முதல் பாதியில் ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த உலகளாவிய ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 9% குறைந்துள்ளது என்று கன்சல்டன்சி Canalys கடந்த மாதம் கூறியது. சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகியவை முதல் 2 இரண்டு இடத்தில் இருக்கும் வேளையில் சியோமி 3வது இடத்தில் உள்ளது.
Xiaomi profit fall by 83 percent; Smartphone Business Slump
Xiaomi profit fall by 83 percent; Smartphone Business Slump சியோமி-க்கே இந்த நிலைமையா..? லாபத்தில் 83% சரிவு..!