சீன பொருளாதாரம் சரிவினைக் கண்டு வரும் நிலையில், சீனா அதன் வளர்ச்சியினை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க தொடங்கியுள்ளது. இது பணப்புழக்கத்தினை அதிகரிக்கலாம். இது நிறுவனங்களின் வளர்ச்சியினை கூட்டலாம். வேலைவாய்ப்பினை அதிகரிக்கலாம். மார்ஜின் விகிதங்களை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா டிரஸ்ட்-ல் இவரா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!

பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தலாம்
மொத்தத்தில் பெய்ஜிங்கின் இந்த நடவடிக்கையானது பொருளாதார வளர்ச்சியினை ஊக்கப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் முடக்கம், கொரோனா தாக்கம் என பலவற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரமானது மீண்டு வர, சீன அரசின் இந்த நடவடிக்கையானது கைகொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிப்பு
சீன அரசின் இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையால் ஒரு வருட கடன்களுக்கான பிரைம் விகிதம் (LPR) 5 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 3.65% ஆக குறைந்துள்ளது. இதே 5 வருட கடன்களுக்கான பிரைம் விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 4.30% ஆக குறைந்துள்ளது.
இதில் ஒரு வருடத்திற்காக எல் பி ஆர் விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் சற்று குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த மே மாதம் 5 ஆண்டு விகிதம் குறைக்கப்பட்டது. தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வே
இது குறித்து கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில் 30 பேரில் 25 பேர், ஓராண்டுக்கான எல்பிஆர் விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று கூறியிருந்தனர். அதே போல 90% பேர் 5 ஆண்டுக்கான வட்டி விகிதத்தினையும் குறைக்கலாம் என கூறியிருந்தனர். இவர்கள் 10 அடிப்படை புள்ளிகள் குறைக்கலாம் என்றும் கணித்து இருந்தனர். அவர்களின் கணிப்பினை போலவே, தற்போது 5 ஆண்டுகால விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

தேவை அதிகரிக்கும்
இது தேவையினை நிச்சயம் ஊக்குவிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறைக்கு இது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. சரிவு பாதையில் உள்ள ரியல் எஸ்டேட் துறையானது, இதனால் மீண்டு வர இது ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். தேவையை மீட்டெடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும்
சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையினால், கடன் தேவையானது அதிகரிக்கும். இது மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், சீனா மட்டும் வளர்ச்சியினை ஊக்கப்படுத்த வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது.
சீனாவின் மந்த நிலைக்கு மத்தியில் கோல்டுமேன் சாச்சஸ், நோமுரா உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள், சீனாவின் வளர்ச்சி விகிதத்தினை குறைத்துள்ளன.
China cuts lending rates to revive economy
China cuts lending rates to revive economy/சீனா எடுத்த அதிரடி முடிவு.. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான முடிவா இருக்கே.. சாதகமான விஷயமா?