சென்னை: ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து அரிய வகை முகச்சிதைவு நோய் பாதித்த சிறுமி டானியாவுக்கு 9 மணிநேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.