'ஐ.என்.எஸ். விக்ராந்த்' போர்கப்பலை செப். 2-ம் தேதி நாட்டு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி,

முதல் முறை யாக உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர் கப்பலை நம் கடற்படை உருவாக்கி உள்ளது.மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ்.

விக்ராந்த் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 860 அடி நீளம் 203 அடி அகலம் உடைய இந்த கப்பல் 40 ஆயிரம் டன் எடையுடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டம் கடந்த ஆக.04-ம் தேதி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ‘ இந்நிலையில் வரும் செப்.2-ம் தேதி இப்போர் கப்பலை நாட்டு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி. அதற்கான ஆயத்த பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.