புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ‘வன அறிவியல் மையங்கள்’ அமைக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது;மாநிலத்தில், விளை நிலங்களில் வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக இத்துறைக்கு இந்த நிதியாண்டிற்கு ரூ.137.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பொது மக்கள் தங்கள் வீட்டு மாடியில் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்க, ‘என் வீடு என் நிலம்’ திட்டத்தின் கீழ் ரூ.5,000 மதிப்பிலான தோட்டக்கலை இடுபொருட்கள், விதைகள், நாற்றுகள், தோட்டக்கலை கருவிகள், நிழல் வலை கொண்ட தொகுப்பு, பாசிக் மூலம் 5,000 குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மத்திய வன நாற்றங்கால் மேம்படுத்தப்படும். ‘ஆலிவ் ரிட்லி’ இன ஆமைகளை பாதுகாத்திட புதுச்சேரி கடற்கரை பகுதியில் 5 இடங்களில் ஆமைக்குஞ்சு பொறிப்பகங்கள் அமைக்கப்படும். கோவையில் உள்ள காடுகள் மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்துடன் இணைந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு ‘வன அறிவியல் மையங்கள்’ அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement