ஐடி பங்குகள் பாதுகாப்பானதா.. கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

சமீபத்திய சரிவில் இந்திய ஐடி பங்குகள் பலத்த சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் டெக்னாலஜி துறை ஃபண்டுகள் 22.78% சரிவினைக் கண்டன. இதே காலகட்டத்தில் டெக்னாலஜி ஃபண்டுகள் 1.31% சரிவினையே கண்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பலரின் விருப்பமாக இருந்த இந்த துறையானது நடப்பு ஆண்டில் மோசமான சரிவினை கண்டுள்ள ஒரு துறையாக உள்ளது,.

கார்ப்பரேட் இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் சிறந்த இடத்தினை கொண்டுள்ளன. நல்ல இருப்பு, ஆரோக்கியமான வளர்ச்சி, அதிக வேலை வாய்ப்பு என சகலமும் உள்ளன.

எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!

 கொரோனா காலத்தில் ஏற்றம்

கொரோனா காலத்தில் ஏற்றம்

குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு மற்ற துறைகளை காட்டிலும் வளர்ச்சி இன்னும் துரிதமானது. மற்ற துறைகள் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ஐடி துறை மட்டும் முன்னோக்கி சென்று கொண்டிருந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்தாலும், லாபம் அதிகரித்தது.

நடப்பு ஆண்டில் தலைகீழாய் மாறிய  நிலவரம்

நடப்பு ஆண்டில் தலைகீழாய் மாறிய நிலவரம்

எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்ற கலாச்சாரமானது வேகமாகத் பரவத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ஐடி பங்குகளும் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பாராத வளர்ச்சியினை கண்டன. சர்வதேச அளவில் ஐடி பங்குகள் நேர்மறையான வளர்ச்சியினை கண்டன. ஆனால் இது நடப்பு ஆண்டு தொடக்கத்தில் அப்படியே தலை கீழாக மாறியுள்ளது. இந்த பங்குகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

செல்லிங் பிரஷர்
 

செல்லிங் பிரஷர்

தற்போது சர்வதேச மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் இங்கிருந்து முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. இதனால் பங்குகள் பலத்த சரிவினைக் காணத் தொடங்கியுள்ளன. ஜனவரி 4, 2022ல் நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் குறியீடானது 39370 ஆக இருந்தது. ஆனால் தற்போது இது 28857 என்ற லெவலில் காணப்படுகிறது.

தேவை உண்டு

தேவை உண்டு

குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியானது மெதுவாக இருந்து வரும் நிலையில், ரெசசன் அச்சம் இருந்து வருகின்றது. இது ஐடி துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அங்கு மந்த நிலை இருந்து வந்தாலும், ஐடி துறையில் தேவையானது வலுவாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக கிளவுட் துறையில் தேவையானது அதிகம் உள்ளது. ஆக முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்கில் ஏற்றம் காணலாம் என கூறுகின்றனர் .

அமெரிக்காவின் தாக்கம் இருக்கலாம்

அமெரிக்காவின் தாக்கம் இருக்கலாம்

இந்திய ஐடி துறையானது, கிளவுட் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நாடாக உள்ளது. ஆக சர்வதேச அளவில் ஏற்படும் தாக்கம் இந்தியாவில் ஐடி துறையில் இருக்கலாம்.

கிளவுட் துறை மட்டும் அல்ல, இன்று வாடிக்கையாளர்களின் அனுபவம், மொபைலிட்டி, செயற்கை நுண்ணறிவு என பல துறைகளிலும் இன்று இந்தியாவின் வருவாய் விகிதம் அதிகம்.

 

 டிஜிட்டல் தேவை குறையுமா?

டிஜிட்டல் தேவை குறையுமா?

அமெரிக்காவில் இன்று தொழில் நுட்ப செலவினங்கள் குறைக்கப்பட்டால் அது இந்திய ஐடி துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆனால் டிஜிட்டல் வளர்ச்சி, தேவையான தேவையான ஒன்று தானே. ஆக தற்போதைக்கு குறைந்தாலும் மீண்டும் தேவைப்படும், ஆக நாம் நீண்டகால நோக்கில் அதனை பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Are IT Sector Stocks Safe?

Are IT Sector Stocks Safe?/ஐடி பங்குகள் பாதுகாப்பானதா.. கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

Story first published: Wednesday, August 24, 2022, 22:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.