செக் மோசடி வழக்கு : தண்டனையில் இருந்து தப்பித்த இயக்குநர் லிங்குசாமி

செக் மோசடி வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இயக்குனர் லிங்குசாமி அபராத தொகையை செலுத்திவிட்டு சிறை தண்டனையில் இருந்து தப்பித்துள்ள நிலையில், வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த லிங்குசாமி, கடந்த 2014-ம் ஆண்டு தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் எண்ணி ஏழு நாட்கள் என்ற படத்தை தொடங்கினார். கார்த்தி மற்றும் சமந்தா இணைந்து நடிக்க இருந்த இந்த படத்திற்காக இயக்குநர் லிங்குசாமி, பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1.03 கோடி கடன் பெற்றுள்ளார்.

ஆனால் எண்ணி ஏழு நாட்கள் படம் டிராப் ஆனதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் வகையில் இயக்குனர் லிங்குசாமி பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திறகு 1.03 கோடிக்கான வங்கி காசோலையை கொடுத்துள்ளார். ஆனால் இந்த காசோலையில் பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து லிங்குசாமி மீது பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் மோசடி வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ10,000 அபாரதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இயக்குனருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அபராத தொகையாக ரூ 10,000 – பணத்தை செலுத்திவிட்டு சிறை தண்டனையில் இருந்து தப்பித்த லிங்குசாமி, இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த வழக்கு இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலானது. அவர்கள் தொடங்கிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிரான உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.